search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடிப்பூரம்  வழிபாட்டு முறை
    X

    ஆடிப்பூரம் வழிபாட்டு முறை

    • ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு பலவித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.
    • குற்றால ஈசனை வணங்கி அருவியில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

    1. ஆடி பூரத்தன்று அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு பூஜைகள் முடிந்த பிறகு, அந்த வளையல்களை வாங்கி அணிந்து கொண்டால் குழந்தைபாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

    2. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு பலவித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

    3. ஆடி பூரம் அன்று கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    4. சென்னை புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் பெரியபாளையம்மன் கோவிலில் தான் ஆடி திருவிழா மிக, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    5. ஆடி பூரத்தன்று கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

    6. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீவனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் இந்த கோவிலில் பிரமாண்ட தீ மிதி திருவிழா நடைபெறும். சுற்று வட்டாரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    7. ஆடி பூரத்தன்று காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

    8. ஆடி பூரத்தன்று மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

    9. ஆடி பூரத்தன்று முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகிவிடும்.

    10. ஆடி மாதம் என்றாலே மல்லிகை மணமும் கூடவே வரும். அம்மன் கோவில்களில் பூக்களால் அலங்கார பூஷிணியாக அம்மன் அமர்ந்திருப்பாள்.

    11. ஆடி பூரத்தன்று குற்றால ஈசனை வணங்கி அருவியில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

    Next Story
    ×