search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    ஆடி திருவிழாக்கள்
    X

    ஆடி திருவிழாக்கள்

    • அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.
    • கள்ளழகர் கோவிலில் விமரிசையாக ஆடித் தேரோட்டம் நடைபெறும்.

    1. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள்

    மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

    2. சென்னை புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் பெரிய பாளையம்மன் கோவிலில் தான்

    ஆடி திருவிழா மிக, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    3. கள்ளழகர் கோவிலில் விமரிசையாக ஆடித் தேரோட்டம் நடைபெறும்.

    4. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 5 நாள் நடை திறந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.

    5. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீவனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

    ஆடி மாதம் இந்த கோவிலில் பிரமாண்ட தீ மிதி திருவிழா நடைபெறும்.

    சுற்று வட்டாரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    6. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது.

    ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள்.

    இதை அந்த பகுதி மக்கள் "ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு" என்று சொல்வார்கள்.

    7. ஆடிப் பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும்.

    அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

    8. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா நடை பெறும் பத்து நாட்களில்,

    ஆடி வீதி நான்கிலும் அம்மன் வலம் வருவார்.

    9. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆண்டாளுக்கு ஆடிப் பூர உற்சவம் மூன்று நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும்.

    10. கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆடிப் பதினெட்டில் மும்மூர்த்திகளும் காவிரிக்கு எழுந்தருள்வார்கள்.

    அன்று இரவு பச்சை மண்ணில் பானை செய்து, மா விளக்கு, காதோலை, கருகமணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை அதில் வைத்து விட்டு வருவர்.

    Next Story
    ×