என் மலர்
செய்திகள்

பாகிஸ்தான் வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி
பாகிஸ்தானின் லாஸ்பெல்லாவில் உள்ள ஷா நூரானி வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடித்ததில் சுமார் 30 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் லாஸ்பெல்லாவில் புகழ்பெற்ற ஷா நூரானி வழிபாட்டுத் தலம் உள்ளது. இங்கு இன்று மாலை சுமார் 500 பேர் தரிசனம் செய்வதற்காக திரண்டிருந்தனர். அப்போது கோவில் வளாகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு போலீசாரும், மீட்புக்குழுவினரும் ஆம்புலன்சுகளுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். பலர் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடினர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் இறந்திருப்பதாக மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Next Story