search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடது கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கும் அஸ்வின்- வார்னர்-9, குக்-8
    X

    இடது கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கும் அஸ்வின்- வார்னர்-9, குக்-8

    இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இடது கை பந்து பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழந்து வருகிறார். #Ashwin
    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? என்ற விவாதம் எழுந்தது.

    ஆனால், குல்தீப் யாதவை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் ஆடும் லெவனில் இடம்பிடித்தார். எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சு பெரிய அளவில் சாதகமாக இல்லை. இதனால் அஸ்வினை 7-வது ஓவரிலேயே இந்தியா அறிமுகப்படுத்தியது. அஸ்வினும் சிறப்பாக பந்து வீசினார்.

    9-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் குக் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டானார். எப்போதுமே அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசக்கூடியவர். இவர் பந்தை எதிர்கொள்ள குக் மிகவும் திணறினார். இன்றைய போட்டியின் மூலம் 8 முறை குக்கை வீழ்த்தியுள்ளார்.



    அஸ்வினை எதிர்த்து குக் 12 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 8 முறை குக்கை அஸ்வின் அவுட்டாக்கி அசத்தியுள்ளார். இரண்டு முறை போல்டு, 1 முறை ஸ்டம்பிங், 3 முறை விக்கெட் கீப்பர் கேட்ச், இரண்டு முறை பீல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

    வார்னர் 9 முறை அவுட்டாகி முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா வீரர் கோவன் 7 போட்டியில் 7 முறை ஆட்டமிழந்துள்ளார். டேரன் பிராவோ, சாமுவேல்ஸ், மோர்னே மோர்கல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் 6 முறை ஆட்டமிழந்துள்ளனர்.



    இதில் பெரும்பாலானோர் இடது கை பேட்ஸ்மேன்கள் ஆவார்கள். இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
    Next Story
    ×