search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் விடைபெற்றார் மோர்னே மோர்கல்
    X

    வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் விடைபெற்றார் மோர்னே மோர்கல்

    தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியுடன் விடைபெற்றார். #SAvAUS #MorneMorkel
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மோர்னே மோர்கல். 33 வயது 179 நாட்களாகும் இவர், தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தியாவிற்கு எதிரான டர்பன் டெஸ்டில் அறிமுகமானார். அதன்பின் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தார். இதுவரை 86 போட்டியில் விளையாடி 309 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு இதுதான் தன்னுடைய கடைசி கிரிக்கெட் தொடர். கடைசி டெஸ்டுடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    கடைசி தொடரில் முத்திரை பதித்து செல்ல வேண்டும் என்று நினைத்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது என்ற சோகமான முடிவுடன் மோர்கலை வழி அனுப்பக்கூடாது என தென்ஆப்பிரிக்கா அணியும் விரும்பியது.



    டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விக்கெட் வீழ்த்தாத மோர்னே மோர்கல் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்தினார். போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார். இதில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    3-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது. இந்த போட்டியில் மோர்னே மோர்கல் களம் இறக்கப்பட்டார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்திய மோர்னே மோர்கல், 2-வது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி, ஆஸ்திரேலியாவை 322 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க முக்கிய காரணமாக இருந்தார். அத்துடன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.



    இன்றுடன் முடிவடைந்த கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா மிகப்பெரிய மார்ஜினான 492 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 48 வருடமாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முடியவில்லை என்ற மோசமான சாதனையை முறியடித்துள்ளது. இந்த புகழோடு மோர்னே மோர்கல் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    Next Story
    ×