search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் 400 விக்கெட் வீழ்த்தினார்
    X

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் 400 விக்கெட் வீழ்த்தினார்

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். #NZvENG #StuartBroad
    நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் பகல்- இரவு ஆட்டமான நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 20.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 58 ரன்னில் சுருண்டது.

    டிரென்ட் போல்டு 10.4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்தினார். டிம் சவுத்தி 10 ஓவர்கள் வீசி 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.

    ராவல் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் லாதம் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். லாதம் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச அளவில் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    31 வயதாகும் ஸ்டூவர்ட் பிராட் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி இலங்கைக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இதுவரை 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதில் 15 முறை 5 விக்கெட்டுக்களும், 2 முறை 10 விக்கெட்டுக்களும் அடங்கும்.



    இலங்கை வீரர் முத்தையா முரளீதரன் 800 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். வார்னே 708 விக்கெட்டுக்களும், அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 525 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஸ்டூவர்ட் பிராட் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். #NZvENG #StuartBroad #SportNews
    Next Story
    ×