search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்மித்துக்கு ஆலன் பார்டர் விருது
    X

    ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்மித்துக்கு ஆலன் பார்டர் விருது

    ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்த வருடத்திற்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை பெற்றுள்ளார். #AllanBorderMedal #ABMedal
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தால் ஒவ்வொரு வருடமும் ஆலன் பார்டர் பெயரில் சிறப்பாக விளையாடும் ஆஸ்திரேலியா வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த வருடத்திற்கான விழா மெல்போர்ன் நகரில் இன்று நடைபெற்றது. இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சிறந்த தலைசிறந்த டெஸ்ட் வீரர் என்ற விருதை பெற்றார். நாதன் லயனுக்கும், ஸ்மித்திற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் ஸ்மித் 6 வாக்குகள் அதிகம் பெற்றார்.



    ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை டேவிட் வார்னரும், சிறந்த டி20 வீரராக ஆரோன் பிஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளார்.



    வார்னருடன் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஸ்மித் ஆகியோர் போட்டியில் இருந்தனர். பிஞ்ச் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆடம் சம்பாவை பின்னுத் தள்ளி விருதை பெற்றார். ஸ்மித் டெஸ்ட் போட்டியில் 6 சதங்களுடன் 1305 ரன்கள் குவித்தார். சராசரி 81.56 ஆகும்.



    சிறந்த வீராங்கனைக்கான விருதை எலிசே பெர்ரி பெற்றுள்ளார். #AllanBorderMedal #ABMedal #Smith #Warner
    Next Story
    ×