search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகின் முதல் வேளாண் விருதை பெற இருக்கிறார் பேராசிரியர் சுவாமிநாதன்
    X

    உலகின் முதல் வேளாண் விருதை பெற இருக்கிறார் பேராசிரியர் சுவாமிநாதன்

    இந்திய வேளாண்மைத்துறை வல்லுநரான சுவாமிநாதன் உலகின் முதல் வேளாண்துறைக்கான விருதை வரும் 26-ம் தேதி பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #MSSwaminathan #ICFA
    சென்னை:

    இந்திய விவசாயத்துறையில் பசுமை புரட்சிகள் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்த வேளாண்துறை வல்லுனர் எம்.எஸ்.சுவாமிநாதன். இவரது அளப்பரிய சேவைகளுக்கு என பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.

    தனியார் பத்திரிக்கை நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், ஆசியாவின் அதிக செல்வாக்கு உடைய 20 மனிதர்களில் சுவாமிநாதனும் ஒருவர் என்றும், மேலும், இந்தியாவில் மகாத்மா காந்தி மற்றும் ரவீந்திரநாத் தாகூருக்கு அடுத்தபடியாக செல்வாக்கு பெற்ற நபராக எம்.எஸ்.சுவாமிநாதன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இவர், உலகின் மிக முக்கிய விஞ்ஞானிகளின் பட்டியலில் சரித்திரத்தில் இடம்பிடிப்பார் என ஐ.நா.வின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜாவியர் பெரெஜ் கூறியிருந்தார்.

    இந்நிலையில், இந்திய உணவு மற்றும் வேளாண் சபை சார்பில் வழங்கப்படும் உலகின் முதல் வேளாண் விருதினை எம்.எஸ்.சுவாமிநாதன் வரும் 26-ம் தேதி பெற உள்ளார். மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாறுபாடு குறித்து அந்த அரங்கில் சுவாமிநாதன் உரையாற்ற உள்ளார்.

    டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெறும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது மற்றும் 1 லட்சம் அமெரிக்க டாலர்களையும் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எம்.எஸ்.சுவாமிநாதனின் உலகளாவிய பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக பொருளாதார சூழலியலின் தந்தை என ஐ.நா புகழாரம் சூட்டியுள்ளதாக இந்திய உணவு மற்றும் வேளாண் சபை பெருமிதம் தெரிவித்துள்ளது. #MSSwaminathan #ICFA
    Next Story
    ×