search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாடிப்பட்டி அருகே அய்யனார் கோவில் திருவிழா
    X

    வாடிப்பட்டி அருகே அய்யனார் கோவில் திருவிழா

    வாடிப்பட்டி அருகே அய்யனார் திருக்கோவிலில் புரட்டாசி மாத திருவிழா நடந்தது.
    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி நீரேத்தான், மேட்டு நீரேத் தான் கிராமங்களுக்கு சொந்தமான ஆதி அய்யனார், சோனைசுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத திருவிழா நடந்தது.

    விழாவையொட்டி அய்யனார்கோவிலில் அய்யனாருக்கு சிறப்பு அபிசே‌ஷகம், ஆராதனைகள், அர்ச்சனைகளுடன் சந்தனகாப்பு, வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது.

    முதல் நாள் நீரேத்தானில் உள்ள அய்யனார் கோவில் வீட்டிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு பெட்டி எடுத்து அய்யனார்கோவில் தெரு, நடுத்தெரு, பிள்ளை யார்கோவில் தெரு, பகவதி அம்மன் கோவில், பெருமாள் கோவில், வருவாய் அலுவலர் அலு வலகம், தர்மத்து கல்தெரு, போஸ்ட் ஆபீஸ், புதூர் துர்க்கைஅம்மன் கோவில், போலீஸ் நிலையம், ஜெமினி பூங்கா, சின்னன்சாமி கோவில், யூனியன் ஆபிஸ் வழியாக 2கி.மீ வயல் வெளிகளுக்குள் பொதுமக்கள், பக்தர்கள் படைசூழ கோவிலை சென்று அடைந்தார்.

    இந்த பெட்டி வரும் வழியில் பக்தர்கள் வாழைப் பழங்களை சாலையின் இருபுறம் உள்ள வீடுகளில் இருந்து சூறைவிட்டனர். இரண்டாம் நாள் கோவிலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு கோவில் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். இரண்டு நாட்களும் இரவு முளைப்பாரி வைத்து பெண்கள் கும்மிபாட்டு பாடினர். இதன் ஏற்பாடுகளை நீரேத்தான் மேட்டு நீரேத்தான் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×