search icon
என் மலர்tooltip icon

    தொகுதிகள்

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வீடு எடுத்து தங்கி மக்கள் பணியாற்றுவேன் என்று அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பிரசாரம் செய்தார்.

    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதியில் ‘அ.தி.மு.க. அம்மா’ கட்சி சார்பில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    நேதாஜி நகரில் 1, 2, 3வது தெருவில் அவர் ஆதரவு திரட்டினார். செல்லும் இடமெல்லாம் அவரை மக்கள் மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். மக்கள் மத்தியில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

    இந்த தொகுதி மக்களின் தேவையை, பிரச்சினையை நான் நன்கு அறிந்துள்ளேன். அவற்றையெல்லாம் தீர்க்க எனக்கு ‘தொப்பி’ சின்னத்தில் வாக்களித்து அமோக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

    புரட்சித்தலைவி அம்மா இந்த தொகுதிக்கு 2 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். மேலும் 4 ஆண்டுகள் நம்முடைய அரசின் மூலம் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி இத்தொகுதியை இந்தியாவிலேயே முதன்மை தொகுதியாக, மாதிரி தொகுதியாக மாற்றுவேன்.

    அதற்காக இந்த தொகுதியிலேயே வீடு எடுத்து தங்கி பணியாற்றுவேன்.

    இந்த தேர்தலில் துரோகிகள், எதிரிகளுடன் சேர்ந்து செயல்படுவதால் இரட்டை இலையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. மீண்டும் இரட்டை இலையை மீட்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் அமைச்சர் செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, எம்.சி. சம்பத், மாவட்ட செயலாளர் பி.வெற்றிவேல் எம்.எல்.ஏ., பாலகங்கா, வெங்கடேஷ் பாபு எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 6-ந் தேதி பிரசாரம் செய்கிறார். வீதி, வீதியாக வேனில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.
    சென்னை :

    தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 227 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் களம் காண்கின்றன. கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அ.தி.மு.க.வின் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

    முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்.

    தற்போது ஜெயலலிதா தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு கடந்த 25-ந் தேதி வந்திருந்தார். அப்போது அவருக்கு அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா 6-ந் தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வேன் மூலம் புறப்பட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக சென்று தனக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    தொகுதிக்கு தான் செயல்படுத்திய நலத்திட்டங்களையும், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களையும் எடுத்துரைத்து ‘இரட்டை இலை’ சின்னத்துக்கு வாக்குகள் சேகரிக்க உள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்கனவே நடந்த இடைத்தேர்தலில் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம், கொருக்குப்பேட்டை உள்பட இடங்களில் ஜெயலலிதா திறந்தவேனில் பேசி வாக்குகள் சேகரித்தார்.

    தற்போது அதே இடங்களில் ஜெயலலிதா மீண்டும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் ஜெயலலிதா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் அவருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது பிரசாரம் செய்வதற்காக ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதிக்கு வர உள்ளதையடுத்து, அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதாவுக்கு மேள-தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கவும் தற்போதே தயாராகி வருகின்றனர்.

    இந்தநிலையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா தனது சூறாவளி பிரசாரத்தை கடந்த மாதம் 9-ந் தேதி சென்னை தீவுத்திடலில் தொடங்கி, விருத்தாசலம், தர்மபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சீபுரம், சேலம், திருச்சி, புதுச்சேரி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் நிறைவு செய்துள்ளார்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் பொதுக் கூட்டத்தின் வாயிலாக அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா வாக்குகள் சேகரிக்க உள்ளார். தொடர்ந்து 8-ந் தேதி தஞ்சாவூரிலும், 10-ந் தேதி வேலூரிலும், 12-ந் தேதி நெல்லையிலும் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். 
    நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் நாங்குனேரி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். நாங்குநேரி தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்திற்கு சென்று நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
    நெல்லை :

    நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பியது. ஆனால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வில் நாடாளும் மக்கள் கட்சிக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை.

    இதனால் நடிகர் கார்த்திக், 6 சிறிய கட்சிகளை இணைத்து ‘‘விடியல் கூட்டணி” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட முடிவு செய்தார். இந்த அணி தமிழகத்தில் சுமார் 60 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

    நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குனேரி சட்டசபை தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து நாடாளும் மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி கூறியதாவது:–

    நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் நாங்குனேரி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக சென்னையில் இருந்து நெல்லைக்கு நாளை (29–ந் தேதி) வருகிறார்.

    பின்பு முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களுடன் நாங்குநேரி தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்திற்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

    நாங்குனேரி தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ளது. இதனால் அங்கு நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாட்டை நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். மேலும் விடியல் கூட்டணி சார்பாக போட்டியிடுபவர்களும் நாளை அந்தந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
    ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் இன்று காலை அ.தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

    சென்னை:

    ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக டி.ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் உள்ள லோட்டஸ் ராமசாமி தெருவில் இன்று காலை அ.தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. டி.ஜெயக்குமார் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் 49–வது வட்டத் தில் உள்ள சஞ்சீவ ராயன் கோவி லில் டி.ஜெயக்குமார் சாமி கும்பிட்டு விட்டு ஓட்டு சேகரிப் பில் ஈடு பட்டார். சஞ்சீவராயன் கோவில் தெரு, பாலு முதலி தெரு, வெங்கடாச்சலம் தெரு, பண்டலை சாலை, ஜி.ஏ.ரோடு, தாண்டவராயர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டுசேகரித்தார்.

    ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை கொடுத்து ஆதரவு திரட்டினார். பகுதி செயலாளர் சி.பி.ராமஜெயம், மண்டல குழு தலைவர், இரா.பழனி மற்றும் மாவட்ட பகுதி, வட்ட கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

    ×