search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSK"

    • ஆர்சிபி தனது பணத்தை சாக்கடையில் வீணடித்ததாக ஒருவர் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது.
    • முதல் பந்தில் டோனி சிக்சர் அடித்த பிறகு, அப்படியே கைகளை கூப்பி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன்.

    ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு 4-வது அணியாக தகுதி பெற வேண்டிய நிலையில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் பேட்டிங் செய்த சிஎஸ்கே வெற்றி பெற 219 ரன்கள் இலக்காக இருந்தாலும், 201 ரன்கள் எடுத்தாலே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலையில் விளையாடினர்.

    கடைசி ஓவரில் சென்னை வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தை டோனி சிக்சருக்கு பறக்கவிட்டார். இந்த பந்து ஸ்டேடியத்தை தாண்டி வெளியே சென்றதால், புதிய பந்து வழங்கப்பட்டது. அது பவுலிங்கிற்கு நன்றாக கைகொடுத்தால், அடுத்த பாலில் டோனி ஆட்டமிழந்தார். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டபோது, ரவிந்திர ஜடேஜாவால் 1 ரன் கூட எடுக்க முடியவில்லை.

    அத்துடன் சென்னை அணியின் பிளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் ஆர்சிபிக்காக கடைசி ஓவரை வீசிய யஷ் தயாள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். முதல் பந்தை டோனி சிக்சர் அடித்த பின்னர், அவர் பொறுமையாக மீதமுள்ள 5 பந்துகளையும் வீசிய விதம் பாராட்டை பெற்றது.

    இதே யஷ் தயாள் தான், கடந்த முறை குஜராத் அணிக்காக விளையாடியபோது ஒரே ஓவரில் 5 சிக்சர்களை கொடுத்து அணியின் தோல்விக்கு காரணமாக இருந்தார். பின்னர் அவர் குஜராத் அணியால் விடுவிக்கப்பட்ட நிலையில் அவரை ரூ. 5 கோடி கொடுத்து ஆர்சிபி 2024 சீசனுக்காக வாங்கியது.

    இந்நிலையில் தனது மகனின் மோசமான ஆட்டத்திற்காக முன்பு கேலி செய்தவர்கள், சென்னை அணியுடனான வெற்றிக்கு பின்னர் பாராட்டு தெரிவிப்பதாக, ஆர்சிபி பவுலர் யஷ் தயாளின் தந்தை நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    யஷ் தயாள் குறித்து அவரது தந்தை கூறியதாவது-

    ஆர்சிபி யஷ் தயாளை ரூ.5 கோடிக்கு வாங்கியபோது, ஆர்சிபி தனது பணத்தை சாக்கடையில் வீணடித்ததாக ஒருவர் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. எல்லோரும் அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் இன்று எனக்கு நிறைய நல்ல செய்திகளும் அழைப்புகளும் வருகின்றன.

    முதல் பந்தில் டோனி சிக்சர் அடித்த பிறகு, அப்படியே கைகளை கூப்பி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். கடவுளே, இன்று என் குழந்தைக்கு ஆதரவளிக்கவும், இது மீண்டும் நடக்கக்கூடாது என்று பிரார்த்தித்தேன்.

    முதல் பந்திற்குப் பிறகு எனது மகன் பொறுமையைக் கடைப்பிடித்த விதம் எனக்குப் பிடித்திருந்தது. முன்பு கேலி செய்தவர்கள் இன்று என் மகனை பாராட்டுகிறார்கள்.

    என்று அவர் கூறினார்.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறியது.
    • இதனை தொடர்ந்து டோனி தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடை பெற்றார். அவர் விமான நிலையத்தில் அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார். அங்கு அவர் பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பெங்களூரு அணியுடனான போட்டியின்போது அவர் ஆட்டம் இழந்த போது ஏமாற்றத்துடன் காணப்பட்டார்.
    • நாங்கள் அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம்.

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

    இந்தப் போட்டிதான் டோனியின் கடைசி ஐ.பி.எல் என்ற கருத்து பரவி வருகிறது. இந்த நிலையில் டோனி தனது எதிர்காலம் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எதிர்காலம் குறித்து டோனி எந்த முடிவையும் அணி நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை. நாங்கள் அதைப் பற்றி பேசவில்லை, நாங்கள் அவரிடம் கேட்க மாட்டோம். நாங்கள் அவரை முடிவு செய்ய அனுமதிப்போம் என்பது உங்களுக்கு தெரியும்.அவர் எங்களுக்குத் தெரிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சி.எஸ்.கே. அணியில் விளையாடிய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கூறியதாவது:-

    இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. அவ்வளவுதான். எனவே இதுவே டோனியின் கடைசி ஐ.பி.எல். போட்டியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவரது கிரிக்கெட் பயணத்தை இப்படி முடிப்பதைப் பார்க்க நான் விரும்பவில்லை.

    பெங்களூரு அணியுடனான போட்டியின்போது அவர் ஆட்டம் இழந்த போது ஏமாற்றத்துடன் காணப்பட்டார். பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்று டோனி நினைத்தார். நாங்கள் அவர் மீண்டும் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
    • சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. மழை பெய்து ஆட்டம் நின்றுவிடும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது. எப்படியாவது சென்னை அணி ஜெயிக்க வேண்டும் என கோடிகணக்கான ரசிகர்களில் பிரார்தனை வீணாகியது.

    ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுப்பதற்காக மைதானத்தில் நின்று கொண்டு இருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆர்சிபி அணி கைக் கொடுக்க வரவில்லை அவர்கள் போட்டியை வென்ற சந்தோஷத்தில் கொண்டாடிக் கொண்டு இருந்தனர் அதனால் டோனி கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதுக் குறித்து பலரும் பல கருத்துகளையும் விவாதங்களையும் முன் வைத்து வருகின்றனர்.

    இது குறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான வாகன் "தோனியின் கடைசி போட்டியா இது இருக்கலாம் என்ற சூழலில், போட்டி முடிந்தவுடன் "லெஜெண்ட் அங்கே இருக்கிறார். முதலில் அவரிடம் சென்று நாம் கை கொடுக்க வேண்டும்" என்று ஆர்சிபி வீரர்கள் மனதில் தோன்றிருக்கவேண்டும். கை கொடுத்து மரியாதை செய்த பின்னர் கொண்டாட்டங்களை தொடர்ந்து இருக்கலாம். டோனிக்கு கை கொடுக்க வேண்டும் என்ற கண்ணியம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என ஆர்சிபி வீரர்கள் வருந்துவார்கள். என கூறியுள்ளார்.

    • சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
    • டோனி கை கொடுக்க வந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல் ஆர்சிபியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததே டோனி திரும்பிச் சென்றதற்கு காரணம் என ஒலிக்கும் குரல்கள்

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டம் நேற்று முன் தினம் ( மே 18) பெங்களூருவில் நடந்தது. சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய இந்த ஆட்டம் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த ஆட்டத்தில் நடந்தவை குறித்த பதிவுகளே சமூக வலைத்தளப் பக்கங்களை ஆக்கிரமித்துள்ளன.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து ஆர்சிபி அணி நிர்ணயித்த 218 ரன்களை துரத்திய சென்னை அணி 191ரன்களிலேயே சுருண்டு தோல்வியைத் தழுவியது. ஆட்டத்தின் இறுதியில் டோனி வெற்றி பெற்ற ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறியதே தற்போது நடந்துவரும் விவாதங்களுக்குக் காரணம்.

    ஆர்சிபி வீரர்கள் வெற்றிக்களிப்பில் இருந்ததால் கை கொடுக்க சென்ற டோனி சட்டென திரும்பி டிரஸிங் அறைக்குச் சென்ற வீடியோ தீயாக பரவி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். டோனி கை கொடுக்க வந்தும் அவரைக் கண்டுகொள்ளாமல் ஆர்சிபி அணியினர் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததே டோனி திரும்பிச் சென்றதற்கு காரணம் என்று அவருக்கு ஆதரவான குரல்கள் எழத் தொடங்கியுள்ளன

    இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் அணிகள் குறித்தும் தனது விமர்சனங்களை வெளிப்படையாக முன்வைக்கக்கூடிய கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான கவுதம் கம்பீர், சில காலத்துக்கு முன் பேசிய பழைய வீடியோ ஒன்றில், சிஎஸ் கே அணி 5 முறை ஐபிஎல் வென்றிருந்தாலும் தாங்கள் பெரியவர்கள் என்ற ஆட்டிட்யூடான மனநிலை அவர்களிடம் இருக்காது.

    ஆனால் விராட் கோலியும் ஆர்சிபி அணியும் ஒரு லீக் போட்டி வென்றாலும், பிளே ஆப்பிற்கு தகுதிபெற்றாலும் கூட தாங்கள் கோப்பையை வென்றதுபோல் நடந்துகொவர்கள் என்று பேசியிருந்தார். அதுவே இந்த மேட்சிலும் நடந்துள்ளதாக இந்த வீடியோவை நெட்டிஸின்கள் அதிகமாக பகிர்ந்து வருவதால் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. 

    • நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் தோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார்.
    • ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது.

    நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே அணி விளையாடிய போட்டிகளில் தோனி ஆடிய 14 ஆட்டங்களில் 161 ரன்களை எடுத்துள்ளார். சென்னை அணி நடந்த 14 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை அணி களமிறங்கியது.

    பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் சென்னை அணி கடைசி ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது. இது சென்னை அணி ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    போட்டி முடிந்து தோனி விராட் கோலிக்கு கை குழுக்காமல் சென்றது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் தோனிக்கு இதுதான் ஐபிஎல் போட்டியில் கடைசியாக விளையாடுவது என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

    ஆனால் இதுவரை அவரிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. தோனி சி.எஸ்.கே நிர்வாகத்திடம் தொடர்ந்து போட்டியில் விளையாடுவதை பற்றி சில மாதங்களுக்கு பிறகு கூறுவதாக கூறியுள்ளார்.

    அதனால் நாம் தோனியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும் . ரசிகர்கள் அனைவரும் அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணிக்காக தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    • காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே வர முடியாமல் போனது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது.
    • வீரர்கள் காயமடையும் போது, ஒவ்வொரு ஆட்டத்திலும் சரியான கலவையில் அணியை தேர்வு செய்வது கடினமாகி விடும்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 27 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்து தொடர்ச்சியாக 6-வது வெற்றியை பெற்றதுடன் அடுத்து சுற்றுக்கும் (பிளே-ஆப்) முன்னேறியது. இதில் கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (54 ரன், 39 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), விராட் கோலி (47 ரன், 29 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஆகியோரது அதிரடியுடன் பெங்களூரு நிர்ணயித்த 219 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 7 விக்கெட்டுக்கு 191 ரன்களே எடுத்தது.

    சென்னை, பெங்களூரு, டெல்லி, லக்னோ ஆகிய 4 அணிகள் தலா 14 புள்ளிகள் பெற்ற போதிலும் பெங்களூரு ரன்ரேட்டில் முந்தியது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுடன் நடையை கட்டியது.

    தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், 'ஆடுகளம் நன்றாகவே இருந்தது. பந்து சற்று நின்று வந்தது. என்றாலும் 200 ரன் என்பது எட்டக்கூடியவை தான். சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்ததால் இலக்கை விரட்டிப்பிடிக்க முடியவில்லை. கடைசி ஓவரில் சில பந்துகளை அடிக்க முடியாதது குறித்து கேட்கிறீர்கள். 20 ஓவர் கிரிக்கெட்டில் இது போல் நடப்பது சகஜம். கடந்த ஆண்டு எங்களது கடைசி நாக்-அவுட் போட்டியை போலவே 2 பந்தில் 10 ரன் தேவை என்ற சூழல் உருவானது. ஆனால் இந்த தடவை நினைத்த மாதிரி முடிவு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

    இந்த சீசனை எடுத்துக் கொண்டால் 14 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்றது மகிழ்ச்சியே. என்றாலும் இந்த ஆண்டில் முதல் ஆட்டத்தில் இருந்தே நிறைய சவால்களை சந்தித்தோம். 3 முன்னணி வீரர்கள் இல்லாதது பின்னடைவாகிப் போனது. காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே வர முடியாமல் போனது நிறைய வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது. இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் பதிரானா (6 ஆட்டத்தில்13 விக்கெட்) காயமடைந்தார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் (9 ஆட்டத்தில் 14 விக்கெட்) சர்வதேச போட்டிக்காக தாயகம் திரும்பியதால் கடைசி கட்டத்தில் அவரை தவற விட்டோம். வீரர்கள் காயமடையும் போது, ஒவ்வொரு ஆட்டத்திலும் சரியான கலவையில் அணியை தேர்வு செய்வது கடினமாகி விடும்' என்றார்.

    • நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது.
    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி நேற்று தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை அணி களமிறங்கியது.

    பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி கடைசி ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    இதையடுத்து, நேற்றைய போட்டி முடிந்த பிறகு சென்னை அணி வீரர்கள், ஆர்.சி.பி. வீரர்களுக்கு கை குலுக்க வரிசையில் நின்றிருந்தனர். சி.எஸ்.கே. வீரர்களில் முன்னே நின்றிருந்த எம்.எஸ். டோனி பெங்களூரு அணி வீரர்களுக்கு கை குலுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.

    களத்தில் இருந்து வெளியே செல்லும் போது வழியில் இருந்த ஆர்.சி.பி. அணியின் பணியாளர்களுக்கு கை கொடுத்த டோனி சோகத்துடன் டிரெசிங் ரூம் சென்றார். எம்.எஸ். டோனி ஆர்.சி.பி. வீரர்களிடம் கை குலுக்காமல் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், எம்.எஸ். டோனி சென்ற பிறகு பெங்களூரு அணியின் விராட் கோலி செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவும் வைரல் ஆகி வருகிறது. வைரல் வீடியோவின் படி, சென்னை வீரர்களிடம் கை குலுக்கிய விராட் கோலி, எம்.எஸ். டோனியை தேடிக் கொண்டு டிரெசிங் ரூம் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

    • நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
    • இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.

    இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கி 218 ஸ்கோரை துரத்திய சென்னை அணியில் ரச்சின்- ரகானே ஜோடியும் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய டோனி ஜடேஜா ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி.

    இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பை வென்ற பிறகு எம்.எஸ்.டோனி ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சென்னை அணி வெளியேறியுள்ளது.

    இந்நிலையில், ருதுராஜ் கெயிக்வாட்டை கேப்டனாக வளர்த்தெடுக்க அடுத்த ஐபிஎல் சீசனிலும் எம்.எஸ்.டோனி விளையாட வேண்டும் என்று முன்னாள் சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    • 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
    • தோனியை பார்த்தவுடன் இது தான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தினேன்.

    ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

    முதலில் ஆடிய பெங்களூரு அணி 218 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய சென்னை அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    இந்த ஐபிஎல் தொடருடன் தோனி ஓய்வு பெறுவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், தோனி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தோல்வியின் விளிம்பில் அணி இருக்கையில் வந்த தோனியை பார்த்தவுடன் இது தான் கடைசி போட்டி என்று உள்ளுக்குள் வருந்தினேன்!

    ஆனால் விக்கெட் ஆவதற்கு முன்பு ஒரு சிக்ஸர் வெளியே அடித்ததை பார்த்தவுடன் இவருக்கு ஓய்வு இல்லை என உறுதி செய்து விட்டேன்!

    சாம்ராஜ்யங்கள் சரியலாம்!

    சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை!

    நன்றி தோனி!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொதுவாக தோற்ற அணியினர் வென்ற அணி வீரர்களுக்கு கை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்க சென்றனர்.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது. அதன்பின் பின் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை அணி, 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியிடம் தோற்றது. இதனால் பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    பொதுவாக தோற்ற அணியினர் வென்ற அணி வீரர்களுக்கு கை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் டோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்க சென்றனர்.ஆனால் ஆர்சிபி அணியினர் வெற்றிக் கழிப்பில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்காமலேயே டோனி சட்டென திரும்பி மைதானத்தை விட்டு வெளியேறி டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்றார்.

    டோனிகை கொடுக்காமல் வெளியேறிய வீடியோவே தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது. டோனிக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் . இதற்கிடையே கிரிக்கட் பிரபலங்களும் டோனியின் செயல் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

     

    அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரரும் வர்ணனையாளருமான மைக்கல் வாகன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், தோல்வியை எப்படி எடுத்துக்கொள்வது எப்படி என்று டோனி, விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கிரிக்கெட் ஆட்டத்தில் கை கொடுப்பது சிறந்த மாண்பாகும். இதுவே விராட் கோலி கை கொடுக்காமல் சென்றிருந்தால் அவரை ஈகோ பிடித்தவர் என்று பலர் விமர்சிக்கத் தொடங்கியிருப்பர்.

    எனினும் ஆர்சிபி வீரர்களும் தோனிக்கு மரியாதை அளித்து அவர் வந்த பொழுது கைகொடுக்க வந்துருக்க வேண்டும், அப்படி செய்யாமல் அவர்களுக்குளேயே கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
    • கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி.

    ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.

    இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கி 218 ஸ்கோரை துரத்திய சென்னை அணியில் ரச்சின்- ரகானே ஜோடியும் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய டோனி ஜடேஜா ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி. இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

    மைதானத்தில் வெற்றிக் களிப்பில் கோலி உள்ளிட்ட ஆர்சிபி அணியனர் கொண்டாடித் தீர்த்தனர். இதனிடையே தோற்ற அணியினர் வென்ற அணி வீரர்களுக்கு கைகொடுக்கும் வழக்கப்படி டோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்ற நிலையில் ஆர்சிபி அணியினர் தங்களது கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்ததால் தோனி அவர்களுக்கு கை கொடுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறி ட்ரெஸ்ஸிங் ரூமிற்க்கு சென்றார்.


     

    இருப்பினும் பிற சிஎஸ்கே வீரர்கள் ஆர்சிபி அணியினருடன் கைகுலுக்கினர். இந்நிலையில் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்காமலேயே டோனி மைதானத்தை விட்டு வேகமாக வெளியேறிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் தோனியின் செயல் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. 

    ×