search icon
என் மலர்tooltip icon

    சண்டிகர்

    • ஆவணங்களை காட்ட மறுத்த அவர் போக்குவரத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • தன்னை மாஜிஸ்திரேட் எனக்கூறி போலீசாரிடம் ஆவேசம் காட்டிய பிரகாஷ்சிங் மர்வா, எதுவாக இருந்தாலும் எனக்கு செல்லான் அனுப்புங்கள் எனக்கூறி போலீசாரிடம் தகராறு செய்துள்ளார்.

    சண்டிகரில் செக்டார் 51 பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்சிங் மர்வா. வக்கீலான இவர் சம்பவத்தன்று வெள்ளை நிற காரில் அப்பகுதியில் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள ஒரு ரவுண்டானாவில் சிவப்பு சிக்னலை கவனிக்காமல் போக்குவரத்து விதிகளை மீறிச்சென்று காரை நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசார் காரை வழிமறித்து அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட சான்றிதழை கேட்டுள்ளனர். மேலும் அவரது காரின் நம்பர் பிளேட் முன்பு துணி ஒன்று தொங்கி உள்ளது. இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது ஆவணங்களை காட்ட மறுத்த அவர் போக்குவரத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    மேலும் தன்னை மாஜிஸ்திரேட் எனக்கூறி போலீசாரிடம் ஆவேசம் காட்டிய பிரகாஷ்சிங் மர்வா, எதுவாக இருந்தாலும் எனக்கு செல்லான் அனுப்புங்கள் எனக்கூறி போலீசாரிடம் தகராறு செய்துள்ளார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடர்ந்து அவர் மீது அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

    • பா.ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
    • பா.ஜனதா வெற்றி பெற முனைப்புடன் செயல்படுகிறது.

    சண்டிகர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    அரியானாவில் வருகிற 25-ந் தேதி தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்து களத்தில் இறங்கியுள்ளது. குரு ஷேத்ரா தொகுதியில் மட்டும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது மற்ற 9 தொகுதியிலும் காங்கிரஸ் நிற்கிறது.

    பா.ஜனதா 10 தொகுதியிலும் தனித்து போட்டியிடுகிறது. கடந்த முறை பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஜனநாயக ஜனதா காட்சி மற்றும் இந்திய தேசிய லோக்தளமும் களத்தில் உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் பா.ஜனதா, காங்கிரசார் இறுதி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் 10 தொகுதிகளையும் பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியது. அதேபோல் இந்த தேர்தலிலும் அங்குள்ள 10 தொகுதிகளையும் கைப்பற்ற பா.ஜனதா புதிய வியூகம் அமைத்துள்ளது.

    பிரதமர் மோடி நேற்று அரியானாவின் அம்பாலா, சோனிபட்டில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அரியானாவின் மறுபெயர் துணிச்சல், நான் அரியானா கோதுமையில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை சாப்பிடுகிறேன். அதனால்தான் நான் வலுவாக இருக்கிறேன்.

    கடந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தனர். மத்தியில் வலுவான அரசு பதவியேற்றது. அதேபோல் இந்த முறையும் பா.ஜனதாவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் பேசினார்.

    பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு பின்னர் அங்கு பா.ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

    இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நயாப் சிங் சைனியை முதல்-அமைச்சராக நியமித்ததன் மூலம் மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 40 சதவீதம் இருக்கும். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்கள் மத்தியில் பா.ஜனதா மிகுந்த ஆதரவை பெற்றுள்ளது.

    பா.ஜனதாவினர் ராமர் கோவில் கட்டியது, 370-வது சட்டபிரிவு நீக்கப்பட்டு காஷ்மீர் தற்போது வளர்ச்சி பாதையில் செல்வது, நாட்டின் பொருளாதார நிலையை வலுப்படுத்தியது, மத்தியில் வலுவான அரசு அமைவது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர்.

    விவசாயிகளுக்கு எதிரான நிலைபாட்டை பா.ஜனதா கடைபிடிப்பதாகவும் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்துள்ளது.

    விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், இளைஞர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் என சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினர்களையும் காயப்படுத்தும் கொள்கை களை பா.ஜனதா பின்பற்றுவதாக காங்கிரஸ் மற்றும் ஐ.என்.எல்.டி. உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    ஐ.என்.எல்.டி. மற்றும் ஜே.ஜே.பி. ஜாட் இன மக்கள் வாக்குகளை பிரிப்பதால் காங்கிரசுக்கு சில தொகுதிகளில் இது சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 58 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 28 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது.

    மே 25-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுடன் கர்னால் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு முதல்-மந்திரியாக பதவியேற்ற சைனி போட்டியிடுகிறார். அங்கு பா.ஜனதா வெற்றி பெற முனைப்புடன் செயல்படுகிறது.

    வருகிற அக்டோபர் மாதம் அரியானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறுமோ அந்த கட்சியின் ஆதிக்கமே சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது.

    • பக்‌சிஷ் சிங் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத் தளத்தில் பரவியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பந்தலா கிராமத்தில் உள்ள குருத்வாரா வளாகத்திற்குள் பக்சிஷ் சிங் என்ற வாலிபர் நுழைந்து அங்கிருந்த சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பின் சில பக்கங்களை கிழித்ததாக கூறி அவரை சிலர் கும்பலாக சரமாரியாக தாக்கினர்.

    படுகாயம் அடைந்த அவரை போலீசார் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

    பக்சிஷ் சிங் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்காக அவர் 2 ஆண்டுகளாக அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது தந்தை லக்விந்தர் சிங் தெரிவித்தார். தனது மகனைக் கொன்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய போலீசில் புகார் செய்தார்.

    அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பக்சிஷ் சிங் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத் தளத்தில் பரவியது. அதில் பக்ஷிஷ் கைகள் கட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அமர்ந்திருப்பதும், ஒரு கும்பல் அவரைச் சுற்றி வளைத்து தாக்குவதும் இடம் பெற்றுள்ளது.

    • ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்த சில வாக்குகளை செல்லாத வாக்குகளாக அறிவித்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.
    • திடீரென கடந்த மாதம் 19-ந்தேதி ஆம் ஆத்மியின் மூன்று கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவினர்.

    சண்டிகரில் மேயர் தேர்தலின்போது ஆம் ஆத்மி வேட்பாளர் 20 வாக்குகள் பெற்றிருந்தார். பாஜக வேட்பாளர் 16 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் தேர்தல் அதிகாரி ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்த 8 வாக்குகள் செல்லாது என தெரிவித்ததுடன், பாஜக மேயர் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

    ஆம்ஆத்மி- காங்கிரஸ் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு அதிக வாக்குகள் விழுந்த நிலையில் தேர்தல் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அப்போது, ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்த சில வாக்குகளை செல்லாத வாக்குகளாக அறிவித்ததை தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.

    அதன்பின் மேயர் தேர்தல் மீண்டும் எண்ணப்பட்டது. அப்போது பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் தோற்கடிக்கப்பட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதனிடையே திடீரென கடந்த மாதம் 19-ந்தேதி ஆம் ஆத்மியின் மூன்று கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவினர்.

    இதனையடுத்து சண்டிகர் சீனியர் துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 35 உறுப்பினர்களை கொண்ட மாநராட்சியில் பாஜக வேட்பாளர் குல்ஜீத் சிங் சந்து 19 வாக்குகள் வெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் குர்ப்ரீத் காபி 16 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதில், ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கட்சி தாவியதால் தான் பாஜக வேட்பாளர் வெற்றி பெற முடிந்தது.

    சண்டிகர் மேயர் பதவியில் ஆம் ஆத்மி உள்ள நிலையில், சீனியர் துணை மேயர், துணை மேயர் ஆகிய பதவிகளில் பாஜக உள்ளது.

    இந்நிலையில், சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவிய 2 கவுன்சிலர்கள் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். பாஜகவில் இணைந்த 3 கவுன்சிலர்களில் பூனம் தேவி மற்றும் நேஹா முசாவத் ஆகிய இரு பெண் கவுன்சிலர்கள் ஆம் ஆத்மியில் இணைந்தனர்.

    அதே சமயம் கட்சி தாவிய ஆம் ஆத்மி கவுன்சிலர் குர்சரண் கலா இன்னமும் பாஜகவில் தான் இருக்கிறார்.

    • தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சண்டிகர் மேயரின் ராஜினாமா நமக்கு உறுதிப்படுத்துகிறது.
    • பாஜக தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்

    மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில் சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சண்டிகர் மேயரின் ராஜினாமா நமக்கு உறுதிப்படுத்துகிறது. பாஜக தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்றது.

    இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்துக் களமிறங்கின. ஆம் ஆத்மி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் மற்ற இரண்டு பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது.

    சண்டிகர் மேயர் தேர்தலில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

    இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.இதற்கு, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • 12 வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் தோல்வி அடைந்தார்.
    • மேயர் தேர்தல் மோசடியை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேயர் அலுவலகம் முன்பு இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சண்டிகர்:

    சண்டிகர் மாநகராட்சி மன்ற மேயர், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயருக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரசும் ஆம்ஆத்மி கட்சியும் இணைந்து பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டன.

    இத்தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி மேயர் பதவிக்கும் காங்கிரஸ் கட்சி மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கும் போட்டியிட்டன. மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவு ஆகின. இதில் இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. இதனால் 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    12 வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் தோல்வி அடைந்தார். 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்தனர்.

    மேயர் தேர்தலில் பாஜக மோசடி செய்து, வெற்றி பெற்றுள்ளதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

    வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சண்டிகர் உயர்நீதிமன்றத்தை ஆம் ஆத்மி கட்சி அணுகி உள்ளது.

    இந்நிலையில் மேயர் தேர்தல் மோசடியை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மேயர் அலுவலகம் முன்பு இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேயர் தேர்தல் முறைகேடுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசாரை கைது செய்தனர்.

    • புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தினார்.
    • துணை ராணுவப்படைகளுடன் சுமார் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    சண்டிகரில் மேயர் தேர்தல் இன்று காலையில் நடந்தது. 35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில் பாஜகவுக்கு 14 கவுன்சிலர்களும், ஆம்ஆத்மிக்கு 13 கவுன்சிலர்களும், காங்கிரசுக்கு 7 கவுன்சிலர்களும், சிரோன்மணி அகாலி தளத்திற்கு ஒரு கவுன்சிலரும் உள்ளனர்.

    மேயர் பதவிக்கு குமாரை ஆம் ஆத்மி கட்சி முன் நிறுத்தியது. பாஜக மனோஜ் சோங்கரை வேட்பாளராக நிறுத்தியது. மூத்த துணை மேயர் பதவிக்கு, காங்கிரஸின் குர்பிரீத் சிங் காபியை எதிர்த்து பாஜகவின் குல்ஜீத் சந்து போட்டியிட்டார்.

    துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளர் நிர்மலா தேவியை எதிர்த்து பாஜக சார்பில் ராஜிந்தர் சர்மா போட்டியிட்டார். 

    இந்நிலையில் மேயர், மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பாஜக மோதியது. தலைமை அதிகாரி அனில்மசிஹ், மேயர் பதவிக்கான வாக்கெடுப்பு பணியை தொடங்கினார்.

    சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனின் முன்னாள் அலுவல் உறுப்பினராக வாக்குரிமை பெற்ற சண்டிகர் எம்.பி கிரோன்கெர் முதலில் வாக்களித்தார். அவர் காலை 11.15 மணிக்கு வாக்களித்தார்.

    இந்த மேயர் தேர்தலில் பாஜக மேயர் வேட்பாளர் மனோஜ்சோங்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் சிங் 12 வாக்குகள் பெற்றனர். 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

    இதில், மேயர் பதவியை பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் மனோஜ் சோங்கர் வென்றார். ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் குல்தீப் குமாரை அவர் எளிதில் தோற்கடித்தார்.

    அதை தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலை நடத்தினார். 

    வாக்கெடுப்பு பணியின்போது, வீடியோ பதிவு செய்யப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கும் முன், மாநகராட்சி இணை ஆணையர், பின்பற்ற வேண்டிய செயல்முறை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.

    மேயர் தேர்தலையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. துணை ராணுவப்படைகளுடன் சுமார் 700 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    மேயர் தேர்தல் முதலில் ஜனவரி 18- ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தேர்தல் அதிகாரிக்கு உடல்நிலை சரியில்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 8 ஆண்டுகளாக மேயர் பதவியை வகித்து வரும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டதால் இது முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.

    • சண்டிகார் மாநிலத்தில் உள்ளது பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையம்.
    • கடந்த 30-ந் தேதி பிரதமர் மோடி பேசிய 100-வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்பட்டது.

    சண்டிகார் :

    சண்டிகார் மாநிலத்தில் உள்ளது பிஜிமர் தேசிய நர்சிங் கல்வி மையம். மத்திய அரசு கல்வி நிறுவனமான இங்கு கடந்த 30-ந் தேதி பிரதமர் மோடி வானொலியில் பேசிய 100-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சி ஒலிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கல்லூரியில் படிக்கும் முதல் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகள் கண்டிப்பாக இந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியை கேட்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. கலந்து கொள்ளாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும், 36 மாணவிகள், அந்த ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களில் 28 பேர் மூன்றாம் ஆண்டு மாணவிகள், 8 பேர் முதலாம் ஆண்டு மாணவிகள் என்று தெரியவந்தது.இதையடுத்து இந்த மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீசு ஒட்டப்பட்டது. அவர்கள் எச்சரிக்கப்பட்டபடி, ஒரு வாரத்திற்கு விடுதியைவிட்டு வெளியே எங்கும் செல்ல முடியாது என்று கல்லூரி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • அம்ரித்பால் சிங்கை தப்பியோடிய குற்றவாளியாக போலீசார் அறிவித்துள்ளனர்.
    • அம்ரித்பால் சிங்கின் முக்கிய கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் இருந்து வருகிறார். இவரது நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங்கை வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்தனர். அவரை மீட்க அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவற்றை ஏந்திய ஆதரவாளர்களுடன் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அவர்களை தடுக்க முற்பட்ட போலீஸ் சூப்பிரெண்டு அளவிலான காவல் அதிகாரிகள் உள்பட 6 போலீசார் காயமடைந்தனர். இதனால், பஞ்சாப்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் எழுந்துள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

    அம்ரித்பால் சிங்கை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். ஆனாலும் அவர் போலீசில் சிக்காததால், அவர் தப்பியோடிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரோடு தொடர்புடைய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையே, அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய உதவியாளரான பாப்பல்பிரீத் சிங், ஹோஷியார்பூரில் இருந்து சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மார்ச் 18-ம் தேதி போலீசாரிடம் இருந்து அம்ரித்பால் தப்பியதில் இருந்து பாப்பல்பிரீத் அவருடன் இருந்துள்ளார்.

    இந்நிலையில், அம்ரித்பால் சிங்கின் மற்றொரு முக்கிய கூட்டாளியான ஜோகா சிங் என்பவரை சர்ஹிந்த் பகுதியில் வைத்து பஞ்சாப் போலீசார் இன்று கைது செய்தனர்.

    இதனை டி.ஐ.ஜி. எல்லை சரக நரீந்தர் பார்கவ் உறுதி செய்துள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன், அம்ரித்பால் சிங்குடன் ஜோகா சிங் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் போலீசார் வெளியிட்டு தேடி வந்தனர்.

    கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அம்ரித்பாலுடன் ஜோகா சிங் உதவியாக இருந்து வந்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர். அம்ரித்பாலை கடந்த மார்ச் 27-ம் தேதி பஞ்சாப்புக்கு திரும்ப கொண்டு வந்துவிட உதவியதுடன், நேரடி தொடர்பிலும் இருந்து வந்துள்ளார். அம்ரித்பாலுக்கு தேவையான தங்குமிடம் மற்றும் வாகன வசதிகளையும் அவர் செய்து கொடுத்துள்ளார் என பார்கவ் கூறியுள்ளார்.

    • அட்டாரி வாகா எல்லை இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.
    • இங்கு இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர்.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படைவீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.

    இந்நிலையில், 74-வது குடியரசு தினத்தையொட்டி சர்வதேச எல்லையையொட்டி பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய ராணுவத்தினர் இனிப்பு பரிமாறிக்கொண்டனர்.

    பஞ்சாப் மாநில எல்லையான வாகாவிலும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துகளையும் பகிர்ந்தனர்.

    • நள்ளிரவு 1 மணியளவில் போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது.
    • காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது

    சண்டிகர்.

    பஞ்சாப் மாநிலத்தில் தரன்தரன் என்ற மாவட்டம் இருக்கிறது. பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே இந்த மாவட்டம் உள்ளது.

    தரன்தரன் மாவட்டத்தில் அம்ரித்சர்-பதின்டா நெடுஞ்சாலையில் ஷர்கலி நகரில் போலீஸ் நிலையம் இருக்கிறது. இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் இந்த போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டது.

    போலீஸ் நிலையத்தின் சுவர், ஜன்னல் கண்ணாடியை உடைத்து கொண்டு போலீஸ் நிலையத்திற்குள் கையெறி குண்டு விழுந்தது. இந்த தாக்குதலால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

    போலீஸ் நிலையத்தின் ஜன்னல், கதவு கண்ணாடி, சுவர் இந்த தாக்குதலில் சேதமடைந்தது. காலிஸ்தான் தீவிரவாதி ஹர்விந்தர் சிங் ரிண்டாவின் சொந்த ஊர் ஷர்கலி ஆகும். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பாகிஸ்தானில் உயிரிழந்தான்.

    கடந்த மே மாதம் பஞ்சாப் போலீஸ் நுண்ணறிவு பிரிவு தலைமை அலுவலகத்தில் நடந்த ராக்கெட் லாஞ்சர் தாக்குதலில் ஹர்விந்தர் சிங்குக்கு தொடர்பு இருந்தது.

    இதனால் தரன்தரன் மாவட்டத்தில் போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் தாக்குதலுக்கு காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் பின்னால் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

    பாகிஸ்தான் எல்லையோர மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தாக்குதல் குறித்து புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. தடய நிபுணர்களும் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    • காவி, வெள்ளை, பச்சை மற்றும் கருநீலம் என ஆடைகளை அணிந்து இருந்தனர்.
    • மூவர்ணக் கொடி வடிவத்தில் நின்று கின்னஸ் சாதனை படைத்தனர்.
    ×