என் மலர்
மாலி மான்வி மூவி மேக்கர்ஸ், D Studios, சன்னி டென்வி (Denvi Productions) தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காதல் ரீசெட் ரிபீட்' திரைப்படத்தின் டீசர் வெளியானது.
முன்னணி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புதுமையான காதல் கதையை சொல்லும் இந்தப் படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
இந்தப் படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியோடு மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களோடு எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா காட்சிகளுக்கு அழகிய காட்சித் தன்மையை வழங்கியிருக்கிறார், ஆண்டனி படத்தொகுப்பை மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை சரவணன் வசந்த், சண்டை இயக்கத்தை மனோகர் வர்மா, உடை வடிவமைப்பை ருச்சி முனோத் கவனித்துள்ளனர்.
மார்ச் 6ஆம் தேதி 'காதல் ரீசெட் ரிபீட்' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், காதல் ரீசெட் ரிபீட் படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது.
'சார்மிங் ஸ்டார்' ஷர்வா முதன்முறையாக அதிரடி ஆக்சன் இயக்குநர் சம்பத் நந்தி இயக்கத்தில் 'போகி' எனும் பிரம்மாண்டமான பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் கே.கே. ராதா மோகன் தயாரிக்கிறார். மேலும் இதனை லட்சுமி ராதா மோகன் வழங்குகிறார். ஷர்வாவின் திரையுலக பயணத்தில் மிக பிரம்மாண்டமான படைப்பாக இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர்.
இதில் ஷர்வா முரட்டுத்தனமான மற்றும் மூர்க்கத்தனமான தோற்றத்தில் தோன்றுகிறார். இந்த போஸ்டர் கடுமையான மற்றும் நெருக்கடியான காட்சியை பிரதிபலிக்கிறது. அத்துடன் வெகுஜன மக்களை கவரும் அவதாரமாகவும் தோன்றுகிறது. அவரது அடர்த்தியான ஒழுங்கற்ற தாடி, மீசை, சுருள் முடி.. ஆகியவை அவருக்குள் ஒரு தீவிரமான போர்க்குணம் இருப்பதை காட்சிப்படுத்துகிறது.
ஷர்வா 'போகி' படத்திற்காக ஒரு தீவிரமான மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அவரது கதாபாத்திரத்தின் தீவிரத்தை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் ஒரு துணிச்சலான தோற்றத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதற்கு முன் பார்த்திராத நடிகரின் மற்றொரு பக்கத்தையும் இது காட்டுகிறது. அத்துடன் போஸ்டரில் இடம் பிடித்துள்ள ஒவ்வொரு அம்சமும் ஒரு விசயத்தை குறிக்கிறது. அது ஷர்வா முழுமையாக ஒரு மிருகத்தனமான முயற்சியில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை குறிக்கிறது.
இந்தப் படக்குழு தற்போது ஐதராபாத்தில் மிகப்பெரிய அரங்கில் அதிரடி ஆக்சன் காட்சிகளை படமாக்கி வருகிறது. இதில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இரண்டு பெரிய அளவிலான அதிரடி அத்தியாயங்களை படமாக்குகிறார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோர் முன்னணி நடிகைகளாக நடிக்கிறார்கள். மேலும் பல பிரபல நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகையின் போது தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமான முறையில் திரையரங்குகளில் வெளியாகிறது.
- நல்லகண்ணு மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- நல்லகண்ணு இன்று பிற்பகல் 1.55 மணி அளவில் காலமானார் என அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. அவருக்கு வயது 101. வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு நல்லகண்ணு மாற்றப்பட்டு அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நலம் குறித்து முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்தனர்.
இதனை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி நல்லகண்ணு இன்று பிற்பகல் 1.55 மணி அளவில் காலமானார் என அரசு மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து நல்லகண்ணு மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நல்லகண்ணு மறைவிற்கு நடிகர் ரஜினிகாந் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது.
அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.
- விரைவில் ‘LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) படம் வெளியாக உள்ளது.
- சம்பளம் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் இயக்குநராக ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'டியூட்' படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்தது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் விரைவில் 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) படம் வெளியாக உள்ளது.
இதனிடையே, பிரதீப் ரங்கநாதன் ஆரம்பத்தில் வாங்கிய சம்பளமும், தற்போதும் வாங்கும் சம்பளம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், நடிப்பு மற்றும் இயக்குநரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் புதிய பாதையில் பிரதீப் ரங்கநாதன் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன் படி, பிரதீப் ரங்கநாதன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி புதிய மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்களை சினிமாத்துறைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தின் கதை பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் இந்த படத்தில் மமிதா பைஜூ நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- விஜய் அண்ணா உங்க வேலூர் பரப்புரை பார்த்து நான் ஒரு வீடியோ போட்டிருந்தேன்.
- உங்கள் ரசிகர்கள் என்னை எல்லா சமூக வலைத்தளங்களிலும் கடித்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வேலூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் தனது கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் விஜய் கூறிய குட்டிக்கதையை விமர்சித்து பிக்பாஸ் ஜூலி வீடியோ வெளியிட்டிருந்தார். விஜயை விமர்சித்து வீடியோ வெளியிட்டதால், அவரது ரசிகர்கள் பலரும் ஜூலியை ஆபாச வார்த்தைகளில் விமர்சித்தனர்.
இந்நிலையில் விஜய் ரசிகர்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு பின்னர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நோக்கி விஜய் பேசியதைப் போலவே, ஸ்லோ மாடுலேஷனில் பேசி ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், "விஜய் அண்ணா உங்க வேலூர் பரப்புரை பார்த்து, அதில் ஒன்னும் இல்லை என்ற ஆதங்கத்தில் நான் ஒரு வீடியோ போட்டிருந்தேன். அதை பார்த்த உங்க ரசிகர்கள்.. ஆமாம், உங்க ரசிகர்கள் தான். அவர்கள் இன்னும் அரசியல்வயப்படவில்லை.
உங்கள் ரசிகர்கள் என்னை எல்லா சமூக வலைத்தளங்களிலும் கடித்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மைனர் பசங்க கிட்ட முக்கால்வாசி போலி ஐடிகள் தான் இருக்கிறது.
அதை வைத்துக் கொண்டுதான் அவர்கள் என்னை மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்காக நான் பயந்து அந்த வீடியோவை நீக்கவும் மாட்டேன், எனது கருத்துக்களில் இருந்து பின் வாங்கவும் மாட்டேன்.
என்னை மிரட்டினால் பரவாயில்லை, ஆனா என்னைச் சார்ந்தவர்களையும் மிரட்டுவதால் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழி வாங்கணும்னா நான் என் வீட்டில் இருப்பேன், இல்லைனா ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணாலும் பண்ணுங்க. ஆனால் அவங்களை விட்டுவிடுங்க. நீங்க பனையூரை விட்டு வெளியே வரமாட்டீங்கல்ல?. நான் இன்னும் உயிரோட தான் இருக்கிறேன், நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன்.
என்னைத் திட்டுனா என்னை திட்டுற மாதிரி தான். மக்களைத் திட்டுவது போல என்று யாரையும் உள்ளே இழுத்துப் போட மாட்டேன்.
ஒரு பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் எவ்வளவு மரியாதையும், மதிப்பும், பாதுகாப்பும் உங்க ரசிகர்கள் கொடுக்கிறார்கள் என்பதை இந்த வீடியோவுக்கு கீழ் இருக்குற கமெண்ட்களை நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- ‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’ படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது.
- அனஸ்வரா ராஜன் நடிப்பில் இதுவரை 4 படங்கள் வெளியாகி இருக்கிறது.
மலையாள திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்ந்த அனஸ்வரா ராஜன், சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரை உலகிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'வித்லவ்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 'லக்கி தி சூப்பர் ஸ்டார்' படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. அனஸ்வரா ராஜன் நடிப்பில் இதுவரை 4 படங்கள் வெளியாகி இருக்கிறது.
இதையொட்டி தமிழ் சினிமாவில் அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி வருகிறது. அனஸ்வரா ராஜன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் மலையாள திரை உலகில் அவருக்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பிரபலங்களின் ஆடம்பர பங்களாக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
- ரசிகர்கள் மும்பைக்கு சென்றால் முதலில் பார்க்கும் இடம் இதுதான்.
திரையில் பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவரும் பாலிவுட் நட்சத்திரங்கள், நிஜ வாழ்க்கையில் வசிப்பதற்காக பல கோடி ரூபாய் மதிப்பில் கனவு இல்லங்களை கட்டி சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக கடற்கரை அருகே அமைதியான, இயற்கை சூழலுடன் கலந்த பங்களாக்கள் இவர்களின் விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் சில பிரபலங்களின் பிரம்மாண்ட வீடுகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்துள்ளது.
சயீப் அலிகான்: இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிப்பவர் சயீப் அலிகான். அரியானாவில் உள்ள படோடி அரண்மனை சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. மொத்தம்: 7 படுக்கையறைகள், டிரெஸ்சிங் ரூம்கள் 150 அறைகள் உள்ளிட்ட ராஜ அம்ச வசதிகள் கொண்ட இந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.800 கோடி.
ரன்பீர் கபூர், ஆலியா பட்: சமீபத்தில் புதிய இல்லத்தில் குடியேறிய ரன்பீர், ஆலியா பட் மும்பையில் 8 மாடி அதிநவீன சொகுசு மாளிகையை கட்டி குடியேறியுள்ளனர். இதன் மதிப்பு ரூ.250 கோடி.
ஷாருக்கான்: மும்பை பாந்த்ராவில் கடலை நோக்கி எழுந்திருக்கும் மன்னட் இல்லம் ஷாருக்கானின் பெருமை. 6 மாடிகள் கொண்ட கடல் பார்வையில் உள்ள இந்த பங்களா மதிப்பு சுமார் ரூ.200 கோடி. ரசிகர்கள் மும்பைக்கு சென்றால் முதலில் பார்க்கும் இடம் இதுதான்.
அமிதாப்பச்சன்: ஜூஹூவில் உள்ள ஜல்சா பங்களாவில் வசிக்கும் அமிதாப் பச்சனின் வீட்டு மதிப்பு சுமார் ரூ.120 கோடி. ரசிகர்கள் தினமும் வெளியே காத்திருக்கும் புகழ்பெற்ற வீடு.
ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே: இந்த ஸ்டைலிஷ் ஜோடி மும்பையில் கடற்கரை பார்வையுடன் கூடிய வீட்டை வாங்கியுள்ளனர். பரப்பளவு: 11,256 சதுர அடி இதன் மதிப்பு சுமார் ரூ.119 கோடி.
ஹிருத்திக் ரோஷன்: கடலை நோக்கிய அழகிய டூப்ளக்ஸ் வீட்டில் வசிக்கும் ஹிருத்திக் ரோஷன் வீட்டின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி.
அஜய் தேவ்கன்-கஜோல்: இந்த ஜோடி மும்பையில் அமைந்துள்ள சொகுசு வீட்டில் வசித்து வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.60 கோடி.
இவ்வாறு பிரபலங்களின் ஆடம்பர பங்களாக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
- இந்த ஓட்டல் ஆடம்பர நிகழ்ச்சிக்கு பெயர் பெற்றது.
- திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்று முதல் தொடங்கியது.
நடிகர் விஜய்தேவரகொண்டா -ராஷ்மிகா காதல் திருமணம் நாளை உதய்ப்பூரில் நடக்கிறது. நெருங்கிய உறவினர்கள் 100 பேர் மட்டும் பங்கேற்கும் இந்த திருமண விழா உதய்ப்பூர் நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் தொலைவில் ஆரவல்லி மலை உச்சியில் அமைந்துள்ள ஐ.டி.சி. மெமென்டோஸ் ரிசார்ட்டில் நடைபெறுகிறது.
மலைப் பகுதியில் விரிவான தோட்டங்களுக்கு மத்தியில் உள்ள இந்த ஆடம்பர ரிசார்ட் தனியுரிமைக்கு பெயர் பெற்றது. இதில் 117 அறைகள் உள்ளன. சுமார் 3 ஆயிரம் பேர் தங்கலாம். இந்த ஓட்டல் ஆடம்பர நிகழ்ச்சிக்கு பெயர் பெற்றது.
திருமணத்திற்காக விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் இருந்து உதய்ப்பூர் புறப்பட்டு சென்றனர். திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நேற்று முதல் தொடங்கியது. இன்று ஹல்டி மற்றும் சங்கீத் விழாக்கள் நடைபெறுகிறது.
நாளை குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் இருவரது திருமணமும் நடைபெறுகிறது. ஆண்டுக்கணக்கில் காதலில் ரகசியத்தை காத்தது போல் திருமண விழாவிலும் ரகசியம் காக்கின்றனர் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா.
திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஜென் ஸீ தலைமுறையினரின் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருவதால் திறமைசாலியான இசை கலைஞர்கள் புது சிந்தனையுடன் உருவாக்கும் மியூசிக் ஆல்பங்களுக்கான வரவேற்பு உயர்ந்து வருகிறது.
இதனை உணர்ந்த பாடகர் - நடிகர் - இசை கலைஞர் ஹர்ஷவர்தன் ' மாயம் நீயடி' எனும் மியூசிக் வீடியோ ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார். ஹர்ஷவர்தன் இந்த மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கான பாடலுக்கு இசையமைத்து, பாடி, ஆடி நடித்திருக்கிறார். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத பின்னணி பாடகி சுப்லாஷினியுடன் இணைந்து ஹர்ஷவர்தன் பாடி இருக்கிறார்.
இந்த பாடலுக்கான வீடியோவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹர்ஷவர்தன் மற்றும் நடிகை சஞ்சனா திவாரி ஆகியோர் இணைந்து பாடலில் தோன்றி காதல் கெமிஸ்ட்ரியை கச்சிதமாக வெளிபடுத்தி ரசிகர்களை மாயம் செய்து மயக்குகிறார்கள். இதன் மூலம் இந்தப் பாடல் வழக்கமான சுயாதீன இசை பாடலுக்கான காணொலியாக இல்லாமல், கமர்சியல் திரைப்படங்களில் இடம்பெறும் மெலோடி பாடலாக உருவாகி இருக்கிறது என்பது உறுதியாகிறது.
ஹர்ஷவர்தன் - இசையை சுவாசமாக நேசிக்கும் இசை கலைஞர் மட்டுமல்ல... இசையனுபவத்தை சிறப்பாக வழங்கும் அற்புதமான ஆற்றலையும் பெற்றவர். இவருடைய முயற்சியில் உருவாக்கி இருக்கும் மாயம் நீயடி' மியூசிக் வீடியோ ஆல்பம் சிறந்த சான்று.
இவர் ஏற்கனவே இரண்டு சுயாதீன இசை ஆல்பத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்கள் பின் தொடர்கிறார்கள். இவருடைய ஒரு மியூசிக்கல் போஸ்ட்டுக்கு லட்சக்கணக்கான லைக்குகளும், லட்சக்கணக்கான வ்யூஸ்களும் கிடைப்பதால் சமூக வலைதளவாசிகளின் ஃபேவரைட் ஸ்டாராகவும் வலம் வருகிறார்.
இதனிடையே ஹர்ஷவர்தன் விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் என்பதும் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் வேடன் கவனம் பெற்றார்.
கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன், தனது நீண்ட நாள் காதலியான எழுத்தாளர் நவமி லதாவை கரம் பிடித்தார்.
செம்புக்காவு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து எளிமையான முறையில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான தாய்க்கும் கேரளாவைச் சேர்ந்த முரளி என்பவருக்கும் திருச்சூரில் பிறந்தவர் ஹிரந்தாஸ் முரளி. இவரே பின்னணியில் வேடன் ஆனார்.
2020 கொரோனா காலத்தில், யூடியூபில் வெளிவந்த இவரின் முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் கவனம் பெற்றார்.
"நான் பாணன் அல்ல; பறையன் அல்ல; புலையன் அல்ல..." என்று சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பாடலில் அவர் பேசியிருந்தார். தொடர்ந்து சில படங்களிலும் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
'மஞ்ஞும்மல் பாய்ஸ்', 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களிலும் இவர் பாடியுள்ளார். திரைப்படங்களை தவிர்த்து சுயாதீன இசை ஆல்பங்களிலும் வேடன் கவனம் செலுத்தி வருகிறார்.
- அபர்ணதி 'தேன்', 'ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
- இறுகப்பற்று திரைப்படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
சின்னத்திரையில் ஆர்யா கலந்துக் கொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. இதைத்தொடர்ந்து 'தேன்', 'ஜெயில்' போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இறுகப்பற்று திரைப்படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடிக்க விருப்பமில்லை என்று அபர்ணதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் அவர் கொடுத்த பேட்டியில் இதுகுறித்து பேசிய அபர்ணதி, "நான் ஒரு ரியாலிட்டி ஷோவில் 100 நாட்கள் நடிகர் ஆர்யாவுடன் பயணம் பண்ணியிருக்கிறேன், நல்ல நினைவுகள் உள்ளது. அதனால் ஒரு Fake ஸ்டோரியை வைத்து ரொமான்ஸ் அல்லது தங்கை ரோல் பண்ணுவதற்கு விருப்பமில்லை. அதனால்தான் எனக்கு ஆர்யாவுடன் படம் பண்ண விருப்பமில்லை" என்று தெரிவித்தார்.
- கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.
- முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நேர்காணல் செய்துள்ளார்.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸில் இந்தச் சிறப்பு நேர்காணல் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நேர்காணலின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. முழுமையான நேர்காணல் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நேர்காணலின் டீசரில் மோகன்லால் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் நீங்கள் பழைய நேர்காணல்களில் ரஜினிகாந்த் படங்கள் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளீர்கள் என்று கேட்க, அதற்கு ஆம் என்று கூறிய பினராயி விஜயன், ரஜினிகாந்தின் ஆக்சன் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.








