என் மலர்

  தொழில்நுட்பம்

  அரசு வலைத்தளங்களில் அமோகமாக நடைபெறும் நவீன கொள்ளை
  X

  அரசு வலைத்தளங்களில் அமோகமாக நடைபெறும் 'நவீன கொள்ளை'

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவில் சேவை வழங்கி வரும் அரசு வலைத்தளங்களில் ஹேக்கர்களின் கைவரிசை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #cryptocurrency #Hacking  இந்தியாவில் உள்ள அரசு வலைத்தளங்களில் கிரிப்டோ-ஜாக்கிங் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாநில அரசு வலைத்தளங்களில் துவங்கி, நகராட்சி கார்ப்பரேஷன் வலைத்தளங்களை ஹேக்கர்கள் கிரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் திருப்பதி நகராட்சி மற்றும் மச்சேர்லா நகராட்சி வலைத்தளங்கள் ஹேக் செயய்ப்பட்டு கிரிப்டோகரென்சிக்களை மைனிங் செய்ய பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென காயின்ஹைவ் ஸ்க்ரிப்ட்டை ஹேக்கர்கள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

  அரசு சேவைகள் மற்றும் இதர விவரங்களை அறிந்து கொள்ள அரசாங்க வலைத்தளங்களை தினந்தோரும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து வெளியாகி இருக்கும் அறிக்கையின்படி அரசு வலைத்தளங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் குறியீடுகள் பயனரின் கம்ப்யூட்டரில் நுழைந்து, அதன்பின் மின்சாரம் அல்லது இண்டர்நெட் இணைப்பு போன்றவற்றை பயன்படுத்தி கிரிப்டோகரென்சி மைனிங் செய்யப்படுகிறது.  மொனேரோ எனும் கிரிப்டோகரென்சியை மைன் செய்ய ஹேக்கர்கள் குறியீடுகளை பயன்படுத்துகின்றனர். மொனேரோ வகையை சேர்ந்த கிரிப்டோகரென்சியை டிராக் செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். மேலும் அரசாங்க வலைத்தளங்களில் அதிகமானோர் பயன்படுத்தி வருவதோடு, இவற்றின் பாதுகாப்பு போதுமான அளவு செய்யப்படாததால் ஹேக்கர்கள் இவற்றை தேர்வு செய்கின்றனர். 

  இதேபோன்று மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவி சங்கர் பிரசாத் பயன்படுத்தி வரும் அதிகாரப்பூர்வ வலைத்தளமும் மொனேரோ கிரிப்டோகரென்சி மைனிங் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது முன்னதாக கண்டறியப்பட்டது. 

  புதிய மால்வேர் மூலம் நூற்றுக்கும் அதிகமான வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் மற்றும் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டு இருப்பது ஹேக்கர்களுக்கு அதிளவு லாபத்தை ஈட்டித்தருகிறது.
  Next Story
  ×