search icon
என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    சென்னையில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி - பீட்டா டிரையல் துவக்கம்
    X

    சென்னையில் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி - பீட்டா டிரையல் துவக்கம்

    • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • முன்னதாக நாட்டின் நான்கு நகரங்களில் ஜியோ 5ஜி பீட்டா டிரையல் துவங்கி நடைபெற்று வந்தது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சென்னையில் 5ஜி சேவைகளை வெளியிட்டு உள்ளது. முன்னதாக மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி என நான்கு நகரங்களில் 5ஜி பீட்டா டிரையல் துவங்கப்பட்டது. தற்போது இன்வைட் செய்யப்பட்ட ஜியோ பயனர்கள் சென்னையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை அனுபவிக்க முடியும்.

    இத்துடன் 5ஜி சார்ந்து இயங்கும் வைபை சேவைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைகள் நத்வாரா மற்றும் ராஜஸ்தானில் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவைகள் கல்வி நிறுவனங்கள், ஆன்மீக தளங்கள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வர்த்தக மையங்கள் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சீராக கிடைக்கும்.

    ஜியோ வெல்கம் சலுகையின் கீழ் பயனர்கள் இந்த சேவையை தற்போது இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 5ஜி வைபை சேவைகள் ஜியோ சேவையை பயன்படுத்தாத பயனர்களுக்கும் கிடைக்கும். இதன் மூலம் அதிவேக இணைய சேவையை பயன்படுத்திய பிறகு ஜியோ சேவையில் இணைந்து கொள்ளலாம் என ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்து இருக்கிறது.

    "ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று 5ஜி சேவை தேர்வு செய்யப்பட்ட சிலருக்கோ அல்லது பெரும் நகரங்களில் வசிப்போருக்கு மட்டும் பிரத்யேகமானதாக இருக்கக் கூடாது. இந்த சேவை ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு வீடு மற்றும் வியாபாரத்திலும் இந்தியா முழுக்க கிடைக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியருக்கும் ஜியோட்ரூ5ஜி வழங்குவதற்கான பயணம் தான் இது," என ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் நிறுவன தலைவர் ஆகாஷ் எம் அம்பானி தெரிவித்தார்.

    Next Story
    ×