என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

ரூ. 599-க்கு லவ் எடிஷன் இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்!
- 60 மணி நேர பிளேடைம் வழங்குகிறது.
- இன்ஸ்டாமார்ட்-இல் பிரத்யேகமாக கிடைக்கிறது.
இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் டப்-ஸ்டெப் பிரான்டின் முற்றிலும் புதிய இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டப்-ஸ்டெப் பஸ் X12 லவ் எடிஷன் (Dubstep Buzz X12) என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் ஸ்விகியின் இன்ஸ்டாமார்ட்-இல் பிரத்யேகமாக கிடைக்கிறது.
அடுத்த வாரம் காதலர்கள் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த இயர்பட்ஸ் அறிமுகமாகி இருக்கிறது. முன்னதாக டப்-ஸ்டெப் பிரான்டு பாப் லவ் ஸ்பீக்கர்கள், இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
புதிய டப்-ஸ்டெப் X12 லவ் எடிஷன் இயர்பட்ஸ் கவர்ச்சிகரமான பேஷன்-ரெட் ஃபினிஷ் செய்யப்பட்டு மெட்டாலிக் அக்சென்ட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில் ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி, X-Bass தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மேம்பட்ட ஆடியோ மற்றும் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC) வசதியை வழங்குகிறது. இதில் உள்ள பேட்டரி 60 மணி நேர பிளேடைம் வழங்குகிறது.

இத்துடன் டச் கண்ட்ரோல் மற்றும் நீண்ட நேர பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சவுகரியமான டிசைன் கொண்டிருக்கிறது. புதிய டப்-ஸ்டெப் பஸ் X12 வயர்லெஸ் இயர்பட்ஸ் லவ் எடிஷன் மாடல் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 599 விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
காதலர் தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டுள்ள "லவ் ஆன் லூப்" திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு டப்-ஸ்டெப் சாதனங்களை இன்ஸ்டாமார்ட் தளத்தில் வாங்கும் போது பயனர்களுக்கு ரிவார்டுகள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 3,000 மதிப்புள்ள வவுச்சர்கள் 9 வெற்றியாளர்களுக்கும், ஒரு வெற்றியாளருக்கு கோவா சென்றுவர இரு டிக்கெட்களும், நடிகர் அபய் தியோலை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.






