என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

ரூ. 99 விலையில் விற்பனைக்கு வரும் CMF பட்ஸ் 2
- முதல் 99 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும்.
- இதனுடன், பிற சலுகைகளும் உள்ளன.
CMF பட்ஸ் 2 விரைவில் இந்தியாவில் வெறும் ரூ. 99-க்குக் விற்பனை செய்யப்பட உள்ளது. நத்திங் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஃபிளாக்ஷிப் ஸ்டோரை திறக்கிறது. பெங்களூரில் இந்த ஸ்டோர் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
கடையின் தொடக்க நாளை முன்னிட்டு, கொண்டாட்ட சலுகையின் ஒரு பகுதியாக, நத்திங் ஸ்டோரினுள் வெறும் 99 ரூபாய்க்கு CMF பட்ஸ் 2-ஐ வாங்கிட முடியும். இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு ஸ்டோர் திறக்கப்பட்டதில் இருந்து முதல் 99 நிமிடங்களுக்கு மட்டுமே இருக்கும்.
நீங்கள் பெங்களூருவில் இருந்தால், ரூ.2,299 மதிப்புள்ள CMF Buds 2 ஐ வெறும் 99 ரூபாய்க்கு விரும்பினால், முதல் 99 நிமிடங்களில் ஸ்டோருக்கு செல்ல வேண்டும். இதனுடன், பிற சலுகைகளும் உள்ளன.
அதன்படி நத்திங் போன் (3) வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தற்போது ரூ.5,999 மதிப்புள்ள Nothing Ear (a) இலவசமாக வழங்கப்படும். நீங்கள் போன் (3a) அல்லது போன் (3a) ப்ரோ வாங்கினால், CMF பட்ஸ் 2-ஐ இலவசமாக பெற முடியும். CMF போன் (3a) லைட் மற்றும் CMF போன் 2 ப்ரோ மாடலுடன், பயனர்கள் இலவச CMF பட்ஸ் 2-ஐ பெறுவார்கள்.
இதுதவிர, நத்திங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஆர்சிபி கோப்பையை காண்பிக்கும். நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்டோர்- 660/1, 100 அடி சாலை, 1வது நிலை, இந்திராநகர், பெங்களூரு, கர்நாடகா என்ற முகவரியில் அமைகிறது. நத்திங்கின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்டோர் திறப்பு விழா வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.






