என் மலர்

  புதிய கேஜெட்டுகள்

  கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன விவோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்
  X

  கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன விவோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விவோ நிறுவனம் உருவாக்கி வரும் முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
  • புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவோ X ஃப்ளிப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

  விவோ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் வலைத்தளத்தில் லீக் ஆகி இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் விவோ X ஃப்ளிப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் V2256A எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது.

  பென்ச்மார்க்கிங் வலைத்தளத்தில் இடம்பெற்று இருப்பதை அடுத்து இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம். புதிய விவோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், சோனி IMX866 50MP பிரைமரி கேமரா, 6.8 இன்ச் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போனின் மேல்புறத்தில் சிறிய இரண்டாவது டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

  கீக்பென்ச் டெஸ்டிங்கில் இந்த ஸ்மார்ட்போன் சிங்கில் கோரில் 1695 புள்ளிகளையும், மல்டி கோரில் 4338 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டுள்ளது.

  விவோ X ஃப்ளிப் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

  விவோ X ஃப்ளிப் ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட FHD+ டிஸ்ப்ளே, HD ரெசல்யுஷன் கொண்ட இரண்டாவது டிஸ்ப்ளே, 50MP சோனி IMX866 பிரைமரி கேமரா, 12MP IMX663 அல்ட்ரா வைடு கேமரா, செய்ஸ் ஆப்டிக்ஸ், பன்ச் ஹோல் ஸ்கிரீனில் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

  இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 12 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4400 எம்ஏஹெச் பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

  Photo Courtesy: whatsdevice

  Next Story
  ×