search icon
என் மலர்tooltip icon

    கணினி

    கேலக்ஸி வாட்ச் 5-க்கு போட்டியாகும் ஒப்போ வாட்ச் 3 - சத்தமின்றி வெளியான தகவல்!
    X

    கேலக்ஸி வாட்ச் 5-க்கு போட்டியாகும் ஒப்போ வாட்ச் 3 - சத்தமின்றி வெளியான தகவல்!

    • ஒப்போ நிறுவனத்தின் புது ஸ்மார்ட்வாட்ச் சர்வதேச வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் ஒப்போ வாட்ச் 3 சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஒப்போ வாட்ச் 3 மாடலின் சர்வதேச வெளியீடு பற்றி இதுவரை அந்நிறுவனம் எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. எனினும், இந்திய சந்தையில் ஒப்போ வாட்ச் 3 மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இந்த வாட்ச் பற்றி எவ்வித தகவலும் இல்லை.

    சர்வதேச சந்தையில் முதல் தலைமுறை ஒப்போ வாட்ச் மாடல் 2020 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகமானது. இந்த சாதனம் மெயின்லேண்ட் சீனா மற்றும் இதர பகுதிகளில் வெவ்வேறு பிராசஸர்களை கொண்டிருந்தது. ஒப்போ வாட்ச் 2 சீரிஸ் சீன சந்தையில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒப்போ வாட்ச் 3 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    முதல் தலைமுறை ஒப்போ வாட்ச் மாடல் வெவ்வேறு பிராசஸர்களை கொண்டிருந்த நிலையில், ஒப்போ வாட்ச் 3 மாடல் சர்வதேச சந்தையில் வித்தியாசமான பிராசஸர் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். மெயின்லேண்ட் சீனாவுக்கு வெளியில் ஒப்போ வாட்ச் SE மாடல் ஒப்போ வாட்ச் 3 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்வாட்ச் விலையை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் ஒப்போ நிர்ணயம் செய்ய முடியும்.

    ஆண்ட்ராய்டு தளத்தில் ஸ்மார்ட்வாட்ச் வாங்குவோர் தேர்வு செய்யும் மாடல்களில் முதன்மையான தேர்வாக கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 5 உள்ளன. இவை தவிர ஃபாசில் ஜென் 6 வெல்னஸ் எடிஷன் மற்றும் கூகுள் பிக்சல் வாட்ச் மாடல்கள் இதர தேர்வுகளாக உள்ளன. எனினும், இரு மாடல்கள் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கேலக்ஸி வாட்ச் மாடல்கள் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கின்றன.

    ஒப்போ வாட்ச் 3 மற்றும் ஒப்போ வாட்ச் SE என இரு மாடல்களிலும் தலைசிறந்த ஹார்டுவேர் உள்ளது. இவற்றில் முறையே ஸ்னாப்டிராகன் W5 சிப், ஸ்னாப்டிராகன் 4100 பிளஸ் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் கோ பிராசஸர்களான அப்போலோ 4 பிளஸ் மற்றும் அப்போலோ 4s வழங்கப்படுகின்றன. மேலே உள்ள பிராசஸர் வியர் ஒஎஸ் 3.0-ஐ சீராக இயக்கும் திறன் கொண்டுள்ளன.

    அந்த வகையில் ஒப்போ இரு ஸ்மார்ட்வாட்ச்களில் எதை அறிமுகம் செய்தாலும், சர்வதேச சந்தையில் சாம்சங் கேலக்ஸி வாட்ச் மாடல்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும். ஒப்போ வாட்ச் 3 சர்வதேச வெளியீடு பற்றி தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×