search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி"

    பேருந்து மீது கல் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். #BalakrishnaReddy
    சென்னை:

    கடந்த 1998-ல் கள்ள சாராய விற்பனையை எதிர்த்து கர்நாடக எல்லையில் போராட்டம் நடைபெற்றபோது, பேருந்து மீது கல் வீசியதாக தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிமீது வழக்கு தொடரப்பட்டது.

    இதில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.

    இந்த வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில், தமிழக அமைச்ச்சர் பால்கிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதற்கிடையே, சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டியை அமைச்சர் பதவியில் இருந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

    இந்நிலையில், பேருந்து மீது கல் வீசிய வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ண ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பாலகிருஷ்ண ரெட்டி, சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல் அமைச்சர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்தார். அதைத்தொடர்ந்து, பாலகிருஷ்ண ரெட்டி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். #BalakrishnaReddy
    ×