search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜியேடேக்"

    • ஜியோடேக் சாதனத்தில் பிரத்யேகமாக கம்யூனிட்டி ஃபைண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • சாதனத்தை ஸ்மார்ட்போனில் உள்ள ஜியோதிங்ஸ் செயலி மூலம் இணைக்க வேண்டும்.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ப்ளூடூத் டிராகிங் சாதனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. ஜியோடேக் என்று அழைக்கப்படும் புதிய சாதனம் பெயருக்கு ஏற்றார்போல் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்டேக்ஸ் சாதனத்திற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஜியோடேக் கொண்டு தொலைந்து போகும் பொபருட்களை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

    அனைவரும் அறிந்ததை போன்றே ஜியோடேக் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பயனர்கள் சாதனத்தை ஸ்மார்ட்போனில் உள்ள ஜியோதிங்ஸ் செயலி மூலம் இணைக்க வேண்டும். இனி டேக்-ஐ பொருளில் கீழே விழாத அளவுக்கு பத்திரமாக வைத்துவிட வேண்டும். ஜியோடேக் ஒட்டுமொத்த எடை 9.5 கிராம்கள் தான்.

    ஜியோடேக் சாதனத்தில் பிரத்யேகமாக கம்யூனிட்டி ஃபைண்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது ஜியோடேக் தொலைந்து போனதை ஜியோதிங்ஸ் செயலி மூலம் குறிப்பிட முடியும். இவ்வாறு செய்தபின் ஜியோ கம்யுனிட்டி ஃபைண்ட் ஜியோ டிராக்கரை காணாமல் போன கடைசி லொகேஷனில் தேடிக் கொண்டே இருக்கும். ஜியேடேக் கண்டுபிடிக்கப்பட்டால், அது உடனடியாக பிளாக் செய்யப்பட்டு விடும்.

    ஜியோடேக் அம்சங்கள்:

    ஜியோடேக்-இல் CR2032 மாற்றக்கூடிய பேட்டரி வழங்கப்படுகிறது. இது ஒரு வருடத்திற்கான பேக்கப் வழங்கும்.

    ஜியோடேக் ரேன்ஜ் கட்டிடங்களுக்குள் 20 மீட்டர்களும், வெளியில் 50 மீட்டர்கள் ஆகும். ஜியோடேக் ப்ளூடூத் 5.1 மூலம் இணைப்பை வழங்குகிறது.

    ஜியோடேக் கொண்டு காணாமல் போகும் பொருட்களை கண்டுபிடிக்க முடியும்.

    ஜியோடேக்-ஐ இரண்டு முறை தட்டினாலே மொபைல் போனை கண்டறிய முடியும். போன் சைலண்ட் மோடில் இருந்தாலும், ரிங் ஆகும்.

    விலை விவரங்கள்:

    ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி ஜியோடேக் விலை ரூ. 749 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட அஞ்சல் குறியீடுகளுக்கு கேஷ் ஆன் டெலிவரி வசதியும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் ஏர்டேக் ஒன்றின் விலை ரூ. 3 ஆயிரத்து 490 ஆகும்.

    ஜியோடேக் வாங்குவோருக்கு கூடுதலாக பேட்டரி மற்றும் லேன்யார்டு கேபிள் ஒன்றும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் ஜியோடேக்-ஐ தங்களது பொருட்களில் இணைத்துக் கொள்ளலாம். 

    ×