என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஒரியன் விண்கலன்"
- புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வைத்து ஒரியன் விண்கலத்தை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.
- விண்கலத்தின் உறுதித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் பல்வேறு சோதனைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் உட்படுத்தி வருகிறார்கள்.
கேப் கனவேரல்:
அரை நூற்றாண்டு கடந்த பின்னர் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி கழகம் கையில் எடுத்தது. இந்த கனவு திட்டத்திற்கு உறுதுணையாக எலான் மஸ்கின் ஸ்பெக்ஸ் எக்ஸ் நிறுவனம், இந்தியாவின் இஸ்ரோ ஆராய்ச்சி மையம் உள்பட உலகின் முன்னணி நிறுவனங்கள் உதவுகிறது. இதற்கான திட்டத்தை ஆர்திமிஸ் என பெயரிட்டு கடந்த 2017-ம் ஆண்டு முதல் விண்கலன்களை தயாரித்து வருகின்றன.
இந்தநிலையில் ஆர்திமிஸ் 2 திட்டத்தை முன்னெடுத்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப நாசா தயாராகி வருகிறது.
அதற்காக ஒரு பெண் விண்வெளி வீராங்கனை உள்பட 4 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் தங்களை நிலவுக்கு அழைத்து செல்லும் ஒரியன் விண்கலத்தை முதல்முறையாக விண்வெளி வீரர்கள் நேரில் சென்று பார்த்தனர். புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வைத்து ஒரியன் விண்கலத்தை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.
தங்களை உற்சாகப்படுத்தி கொள்ளவும் ஆயத்தப்பணிகளை முடுக்கி விடும் பணிக்காக விண்வெளி வீரர்கள் நிலவுக்கு அழைத்து செல்லவிருக்கும் விண்கலத்தை நேரில் பார்க்க அனுமதி வழங்கப்பட்டதாக நாசா அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த விண்கலத்தின் உறுதித்தன்மையை பரிசோதிக்கும் வகையில் பல்வேறு சோதனைகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் உட்படுத்தி வருகிறார்கள்.