search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலும்புகள் வலுப்பெறும்"

    • எலும்புகள் வலுப்பெற சுக்கு களி பெரிதும் உதவுகிறது.
    • சுக்கு களி செய்து சாப்பிட்டால் சளி இருமல் குணமாகும்.

    சுக்கில் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் அடங்கியிருக்கின்றன. சுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். சளி இருமல் என்றால் சுக்கு களி செய்து சாப்பிட்டால் சளி இருமல் குணமாகும்.

    அதுமட்டுமில்லாமல் உடலில் செரிமானப்பிரச்சினையை சீராக்குவதற்கும் இந்த சுக்குகளி உதவுகிறது. மேலும் பாலூட்டும் தாய்மார்கள் கூட இந்த சுக்கு களியை சாப்பிட்டு வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தம், வாந்தி போன்ற பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வினை அளிக்கும்.

    குழந்தைகளின் எலும்புகள் வலுப்பெற இந்த சுக்கு களி பெரிதும் உதவுகிறது.மேலும் பிரசவமான பெண்களுக்கு கர்ப்பப்பை வலுவாக மாற இந்த களியை செய்து தரலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும் இது உதவுகிறது.

    தேவையான பொருட்கள்

    அரிசி- 1 கப்

    சுக்கு -50 கிராம்

    ஏலக்காய் - ஒரு ஸ்பூன்

    நல்லெண்ணெய்- 100 கிராம்

    கருப்பட்டி வெல்லம் - 200 கிராம்

    செய்முறை:

    அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். சுக்கு மற்றும் வெல்லத்தை நன்றாக ஈடித்து வைத்து கொள்ள வேண்டும். அதன்பிறகு சுக்கு, ஏலக்காய், அரிசி அனைத்தும் மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

    ஒரு அடி கனமான வாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கெட்டிதட்டாமல் கைவிடாமல் நன்கு கிளற வேண்டும். மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். மாவு நன்றாக வெந்த பிறகு அதில் தண்ணீர் சேர்த்து காய்ச்சிய வெல்லக் கரைசலை வடித்து அதனுடன் சேர்க்க வேண்டும்.

    அதன் பிறகு வாணலியில் ஒட்டாமல் வருவதற்கு நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு வரும் வரை நன்றாக கிளற வேண்டும். அதன்பிறகு உருண்டையாக திரண்டு வரும் சமயம் அடுப்பை அணைத்து பரிமாறவும். அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும். மேலும் பிரசவம் ஆன சமயத்தில் இதை தாய்க்கு கொடுப்பார்கள்.

    ×