search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஜி சைபர்ஸ்டர்"

    • புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • இந்த வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 520 கிமீ ரேன்ஜ் வழங்குகிறது.

    எம்.ஜி. நிறுவனத்தின் சைபர்ஸ்டர் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட எம்.ஜி. சைபர்ஸ்டர் தற்போது சீனாவில் அறிமுகமாகி இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடல் கிளாமர் எடிஷன், ஸ்டைல் எடிஷன் மற்றும் பயோனிர் எடிஷன் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்த மூன்று வேரியண்ட்களும் RWD 501, RWD 580 மற்றும் AWD 520 என மூன்று வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எம்.ஜி. சைபர்ஸ்டர் மாடல் ஆடம்பர எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இதில் 77 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 536 ஹெச்.பி. பவர், 725 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 520 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. எம்.ஜி. சைபர்ஸ்டர் மாடலில் உள்ள கன்வெர்டிபில் சாஃப்ட் டாப்-ஐ (மேற்கூரை) மின்திறன் மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் லம்போர்கினி கார்களில் உள்ளதை போன்ற சிசர் ரக கதவுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும்.

    விலையை பொருத்தவரை எம்.ஜி. சைபர்ஸ்டர் மாடல் CNY 3,19,800 இந்திய மதிப்பில் ரூ. 37 லட்சம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை CNY 3,55,800 இந்திய மதிப்பில் ரூ. 41 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    ×