search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி"

    • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் சென்னையில் மோதுகிறது.

    இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    உலக கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் சென்னையில் மோதுகிறது.

    இதையடுத்து, உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சியை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது.

    இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

    அதன்படி, சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் ரூ.33 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரன்னர் அப் அணிக்கு சுமார் ரூ.16 கோடி பரிசும், அரையிறுதியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா ரூ.6 கோடி பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், குரூப் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.82 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×