search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகிய கூழாங்கற்கள்"

    • அழகுவாய்ந்து கூழாங்கற்கள் லாரியில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கூழாங்கற்களை ஏற்றிவிட்டு தார்ப்பாய் போட்டு மூடும் போது போலீசார் வந்ததால் உரிமையாளர் தப்பியோடி விட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே மட்டிகை கிராமத்தில் இருந்து அழகுவாய்ந்து கூழாங்கற்கள் லாரியில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் மட்டிகை கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு நிறுத்தப்ப ட்டிருந்த லாரியை 2 பேர் தார்ப்பாய் போட்டு கட்டிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்கு ப்பின் முரணாக பதில் கூறினர். அப்போது திடிரென ஒருவர் தப்பியோடினார். மற்றொருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம், வெள்ளைக்கோவில் வீதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் துரை (வயது 35) என்பதும், இவர் லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது. மேலும், தப்பியோடியவர் கோவிலாங்குப்பத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் ஆனந்தராஜ் (40). லாரி உரிமையாளர் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் அழகிய கூழாங்கற்களை எடுத்துச் சென்று விற்க திட்டமிட்டு, லாரியில் ஏற்றியுள்ளனர். கூழாங்கற்களை ஏற்றிவிட்டு தார்ப்பாய் போட்டு மூடும் போது போலீசார் வந்ததால் உரிமையாளர் தப்பியோடி விட்டார். இதனைத் தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த திருநாவலூர் போலீசார், லாரி உரிமையாளர் ஆனந்தராஜ், டிரைவர் துரை மீது வழக்குபதிவு செய்தனர். டிரைவர் துரையை கைது செய்த போலீசார், தப்பியோடிய ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.

    ×