search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருகம்புல் விநாயகர்"

    • சங்கரன் மகன் ஐங்கரனை வழிபட்டால் எந்தச் சங்கடங்களையும் தீர்த்துவைப்பான் என்பதில் ஐயமில்லை.
    • விநாயகர் கோவிலுக்கு சிதறு தேங்காய் உடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

     

    சங்கரன் மகன் ஐங்கரனை வழிபட்டால் எந்தச் சங்கடங்களையும் தீர்த்துவைப்பான் என்பதில் ஐயமில்லை.

    நாம் தொடுக்கும் வழக்கு, நியாயமான வழக்காய் இருந்தால் உறுதியாய் நமக்கு வெற்றி கிட்டும்.

    விநாயகரை வழிபட ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி திதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    இந்தச் சதுர்த்தி திதி எந்தக் கிழமையில் அமைந்தாலும் சரி அன்று வீட்டைத் தூய்மை செய்ய வேண்டும்.

    கோமியம், கடல்நீர் ஆகியவற்றைத் தெளிக்க வேண்டும். மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும்.

    வீட்டிலுள்ளவர் எல்லோரும் நீராடி, தூய்மையாக இருக்க வேண்டும்.

    அவல், பொரி, கடலை, வெல்லம், இளநீர், பசும்பால், தேன், கொழுக்கட்டை, மோதகம், சுண்டல் ஆகியவற்றைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

    அருகம்புல், செம்பருத்தி, வெள்ளை எருக்க மலர் ஆகியவற்றைத் தயாராக வைத்துகொள்ள வேண்டும்.

    அருகிலுள்ள விநாயகர் கோயிலில் சந்தனக் காப்புச் செய்து கொண்டுவந்த சந்தனத்தை மஞ்சள் தூளுடன் கலந்து, பிசைந்து, பெரிதாகப் பிள்ளையாரைச் செய்து கொள்ள வேண்டும்.

    கிழக்கு முகமாக வீட்டின் அறையில் பீடம் அமைக்கப்பட வேண்டும். அதன் மீது முழுவதும் எருக்க மலர்களைப் பரப்ப வேண்டும்.

    அதில் அருகம்புல் பரப்பி மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும்.

    பின்பு அதற்கு குங்குமத் திலகமிட்டு, அருகம்புல் மாலை இட்டுச் சுற்றிலும் செம்பருத்தி மலர்களை வைத்து அலங்கரிக்க வேண்டும்.

    ஐந்து முகக் குத்துவிளக்கில் நெய் ஊற்றி ஏற்ற வேண்டும்.

    விநாயகர் பீடத்திற்குக் கற்பூர தீபம் காட்டி, தேங்காய் உடைத்து விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்களையும்,

    அஷ்டோத்திர சத நாமாவளியையும் சொல்லி, அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

    பின்பு கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும்.

    விநாயகர் கோயிலுக்கு சிதறு தேங்காய் உடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பிரசாதங்களைப் பிறருகுத் தந்த பின்பே வீட்டிலுள்ளவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இந்த விநாயகர் பூஜையை ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி திதி அன்று செய்ய வேண்டும்.

    இப்படிச் செய்தால் வழக்குகளில் வெற்றிகிட்டும், குடும்ப நிலையில் முன்னேற்றம் காணும். செல்வபெருக்கு, புகழ் ஆகியன கிட்டும்.

    ×