search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vigneswara School"

    • சேர்மன் பார்த்தசாரதி மாணவர்களுக்கு வாழ்த்து
    • தேர்வு முடிவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சி அடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சேதராப்பட்டு விக்னேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சாதனை சாதனை புரிந்துள்ளனர்.

    புதுவை சேதராப்பட்டு விக்னேஸ்வரா மேல்நிலை பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு 12 அரசு பொதுத் தேர்வில் தொடர்ந்து 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான தேர்வு முடிவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சி அடைந்தனர்.

    இது மட்டுமல்லாது, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி மாணவி நர்மதா 600 க்கு 586 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இடம் பிடித்தார். மாணவிகள் காவியா, சுவேதா ஆகிய இருவரும் 575 மதிப்பெண்களும், மாணவர் நரேஷ் 566 மதிப்பெண்ணும், சக்திவேல் 562 மதிப்பெண்ணும், மாணவி சாந்தி 558 மதிப்பெண்ணும் பெற்று சாதனை புரிந்தனர்.

     வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் 100% தேர்ச்சி பெற்ற விக்னேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவர்களில் மாணவி ரேவதி 500க்கு 491 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இடம் பிடித்தார். மாணவி நந்தினி 478 மதிப்பெண்ணும், மாணவி தியா 469 மதிப்பெண்ணும், மாணவர் சக்திவேல் 462 மதிப்பெண்ணும் மாணவர் சந்தோஷ் 461 மதிப்பெண்ணும் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

     பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் சேர்மன் பார்த்தசாரதி, துணை முதல்வர் மோகன், பள்ளியின் பொறுப்பாசிரியை மகேஸ்வரி ஆகியோர் சாதனை புரிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளையும், பெற்றோரையும் பள்ளியின் சேர்மன் பார்த்தசாரதி பாராட்டினார் .

    ×