search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ultimate table tennis"

    • கடந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தபாங் டெல்லி அணி ஜி.சத்யனை தங்கள் வசம் வைத்துள்ளது.
    • 4-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் (யூ.டி.டி.) போட்டி புனேயில் ஜூலை 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது.

    மும்பை:

    பெங்களூரு ஸ்மாஷர்ஸ், சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி, கோவா சேலஞ்சர்ஸ், புனேரி பால்டன், யு மும்பா ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் 4-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் (யூ.டி.டி.) போட்டி புனேயில் ஜூலை 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மும்பையில் நடக்கிறது.

    இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைப்பது, பரஸ்பர பரிமாற்றம் அடிப்படையில் வீரர்களை மாற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன்படி நடப்பு சாம்பியன் சென்னை லயன்ஸ் 10 முறை தேசிய சாம்பியனான சரத் கமலை தங்கள் அணியில் தக்க வைத்து இருக்கிறது.

    இதேபோல் கடந்த முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தபாங் டெல்லி அணி ஜி.சத்யனை தங்கள் வசம் வைத்துள்ளது. நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ராவை பெங்களூரு ஸ்மாஷர்ஸ் அணி தக்கவைத்து இருக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான மனவ் தக்கர் யு மும்பா அணியில் தொடருகிறார்.

    ×