என் மலர்
நீங்கள் தேடியது "truck carrying sand abducted"
- பாகூர் அருகே மணல் கடத்தி வந்த மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
புதுச்சேரி:
பாகூர் அருகே மணல் கடத்தி வந்த மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாகூர் போலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு ஹமீத் உசேன் மற்றும் போலீசார் குருவிநத்தம் தூக்கு பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் அந்த மினி லாரியில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் மணலுடன் மினி லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்த பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தி வந்த. விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம் புதுநகர் காலனி பகுதியை சேர்ந்த டிரைவர் அய்யனார் (வயது 35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






