என் மலர்
நீங்கள் தேடியது "student's body"
- புதுவை கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் தீபன் (வயது 16). லாஸ்பேட்டையைச் சேர்ந்த விநாயகம் இவரது மகன் சண்முகம் (16) இருவரும் ஒரே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.
- இந்நிலையில் மாணவன் தீபன் உடல் கோட்டகுப்பம் அருகே உள்ள நடுக்குப்பத்தில் கரை ஒதுங்கியது.
புதுச்சேரி:
புதுவை கருவடிக்குப்பத்தைச் சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் தீபன் (வயது 16). லாஸ்பேட்டையைச் சேர்ந்த விநாயகம் இவரது மகன் சண்முகம் (16) இருவரும் ஒரே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இருவரும் இவர்களது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து கோட்டகுப்பத்தை அடுத்த சின்ன முதலியார் சாவடியில் கடலில் 6 பேரும் குளித்தனர். அப்போது சண்முகம் மற்றும் தீபன் இருவரும் ராட்சத கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டகுப்பம் போலீசார் மாணவர்களின் உடலை தேடினர். ஆனால் மாணவர்கள் உடல் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாணவன் தீபன் உடல் கோட்டகுப்பம் அருகே உள்ள நடுக்குப்பத்தில் கரை ஒதுங்கியது. உடலை மீட்டு கோட்டக்குப்பம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கரை ஒதுக்கிய மாணவன் தீபனின் உடலை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மற்றொரு மாணவனின் உடலை மீனவர்கள் உதவியுடன் போலீசார் அப்பகுதியில் தொடர்ந்து தேடி வருகின்றனர்.






