என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "station employee"

    • திருபுவனை திருவாண்டர்கோவிலில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது.
    • இந்த பெட்ரோல் பங்கை கடலூர் அண்ணாநகரை சேர்ந்த ஸ்ரீராமுலு நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    திருபுவனை திருவாண்டர்கோவிலில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கை கடலூர் அண்ணாநகரை சேர்ந்த  ஸ்ரீராமுலு நடத்தி வருகிறார்.

    இந்த பெட்ரோல் பங்கில் ஊழியர் சரவணன் வாடிக்கையாளர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கு பெட்ரோல் நிரப்பி க்கொண்டிருந்தார்.

    அப்போது திருவாண்டார் கோவில் சின்னபேட்டை சேர்ந்த ராஜா என்பவர் குடிபோதையில் அவரது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புமாறு சரவணனிடம் கூறினார்.

    ஆனால் பணம் கொடுக்க வில்லை. இதையடுத்து சரவணன் கூகுல் பே மூலம் பணம் செலுத்துமாறு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா தகாத வார்த்தைகளால் திட்டி சரவணனை தாக்கினார்.

    மேலும் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணனை குத்திவிட்டு தப்பியோடி விட்டார்.

    இதில் படுகாயமடைந்த சரவணனை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஸ்ரீராமுலு திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ராஜா மீது ஏற்கனவே அடிதடி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×