என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spread misinformation"

    • புதுவை கிழக்கு மாநில அ.தி.மு..க செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது
    • உள்துறை அமைச்சகம் அது சம்பந்தமான சீராய்வு கூட்டத்திற்கு கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு..க செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்லியை போன்று அரசு நில விற்பனை அதிகாரமும், அரசு நிலத்தை 99 ஆண்டிற்கு குத்தகை விடும் அதிகாரமும் மாநில அரசுக்கு தேவை என முதல் -அமைச்சர் ரங்கசாமி அளித்த கடிதத்தின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் அது சம்பந்தமான சீராய்வு கூட்டத்திற்கு கவர்னர் மாளிகையில் ஏற்பாடு செய்திருந்தது.

    1973-ம் ஆண்டில் இருந்து மத்திய அரசிடம் உள்ள அரசு நில விற்பனை, குத்தகை விடும் அதிகாரத்தை முதல்-அமைச்சர் மாநில அரசுக்கு கேட்கிறார். இந்த அதிகாரம் ஏதோ மாநில அரசிடம் உள்ளது போன்றும் அதை மத்திய அரசு எடுத்து கவர்னரிடம் ஒப்படைப்பது போன்றும் தவறான கருத்தை தி.மு.க. மக்கள் மத்தியில் பரப்பி உள்ளது.

    ரோடியர் மில்லுக்கு சொந்தமான பட்டானூர் நிலத்தை இன்றுவரை நமக்கு அதிகாரம் இல்லாததால் விற்பனை செய்ய முடியவில்லை.

    சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு ஆர்ஜிதம் செய்த நிலத்தை பிப்டிக் நிறுவனத்திற்கு மாற்ற முடியவில்லை.இதற்கு மாநில நில உரிமை சம்பந்தமான சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசிடம் உள்ள அதிகாரம் நமக்கு வழங்க வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் பொய் தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் மத்திய, மாநில அரசுகள் மீது அவதூறு பரப்பி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் தி.மு.க.வின் முயற்சி தவறானது.

    அரசு நில விவகாரத்தில் மத்திய அரசிடம் உள்ள அதிகாரத்தை மாநில அரசுக்கு கேட்கிறோம். மத்திய அரசு மாநில அரசுக்கு டெல்லி போன்று நில அதிகாரம் வழங்கினால் அது மாநில நிர்வாகி கவர்னர் அதிகாரத்திற்கு உட்பட்டு தான் வழங்கப்படும்.

    பொய் தகவல்களை பரப்பி புதுவையில் அரசியல் ஆதாயம் தேடும் தி.மு.க. இதுபோன்ற தவறுகளை செய்வதை நிறுத்த வேண்டும்.எதற்கெடுத்தாலும் கவர்னர் மீது அவதூறு ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ந்து வீண் புரளியை பரப்புவதை தி.மு.க. நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×