என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேட் 2025"

    • ஊழியர்களை பணியில் சேர தேர்வு செய்கின்றன.
    • அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

    நாடு முழுக்க ஐஐடி உள்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் 'கேட்' எனும் தேசிய நுழைவு தேர்வு எழுத வேண்டியது அவசியம் ஆகும். இதே போல் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் 'கேட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஊழியர்களை பணியில் சேர தேர்வு செய்கின்றன.

    இயந்திரவியல், கட்டிடவியல் உள்பட மொத்தம் 30 பாடப்பிரிவுகளில் 'கேட்' தேர்வு கணினி வழியில் நடத்தப்படுகிறது. 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் 'கேட்' தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தேர்வர்கள் 'கேட்' தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தேர்வு முடிவுகள் வெளியான நாள் தொடங்கி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

     


    2025 ஆம் ஆண்டுக்கான 'கேட்' தேர்வு பிப்ரவரி 1, 2 மற்றும் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் காலை மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் நடத்தப்படுகிறது. காலை தேர்வுகள் 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் தேர்வுகள் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடைபெறும்.

    இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை ஐஐடி ரூர்க்கி நீட்டித்துள்ளது. இதனால் தேர்வர்கள் நவம்பர் 20 ஆம் தேதி வரை 'கேட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

    கேட் 2025 அட்டவணை

    பிப்ரவரி 01 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை: CS1, AG, MA

    பிப்ரவரி 01 பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை: CS2, NM, MT, TF, IN

    பிப்ரவரி 02 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை: ME, PE, AR

    பிப்ரவரி 02 பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை: EE

    பிப்ரவரி 15 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை: CY, AE, DA, ES, PI

    பிப்ரவரி 15 பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை: EC, GE, XH, BM, EY

    பிப்ரவரி 16 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை: CE1, GG, CH, PH, BT

    பிப்ரவரி 16 பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை: CE2, ST, XE, XL, MN

    ×