என் மலர்
நீங்கள் தேடியது "சயிஃப் அலிகான்"
- தேவரா திரைப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.
இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, இப்படத்தில் இரண்டாவது பாடலான 'சுத்தமல்லி' வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலை காவாலா பாடலை பாடிய சில்பா ராவ் பாடியுள்ளார்.
இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தேவராவின் படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சயிஃப் அலிகான் கதாப்பாத்திரத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.
கிலிம்ப்ஸ் வீடியோவில் மல்யுத்த சண்டை வீரராக காட்சியளிக்கிறார். இப்படத்தில் பைரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.