என் மலர்
நீங்கள் தேடியது "கென்னடி எம்.எல்.ஏ."
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ரூ.1000 வழங்கும் திட்டத்தை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மகளிர் மேம்பாட்டுத்துறை மூலம் மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்குவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும் பயனாளி களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதுபோல் உப்பளம் தொகுதியில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.
நிகழ்ச்சியின் போது தி.மு.க. மகளிரணி மாநில அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீராம், காங்கிரஸ் சிட்டிபாபு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேலு, அரிகிருஷ்ணன், நோயல், காளப்பன், விநாயகமூர்த்தி, கணேசன், சகாயம், ராக்கேஷ், பாஸ்கல், மோரீஷ், ரகுமான், மரி ஆகியோர் உடன் இருந்தனர்.






