search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்மிடிப்பூண்டி கி வேணு"

    • தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டு கும்மிடிப்பூண்டி கி.வேணு உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், பன்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மிசா.கும்மிடிப்பூண்டி கி.வேணு. தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் திருவள்ளூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வுமான இவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மகன் கி.வே.ஆனந்தகுமார் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக பதவி வகித்து வருகிறார். மகள் உமாமகேஸ்வரி திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக பதவி வகித்து வருகிறார். காலமான மிசா.கும்மிடிப்பூண்டி கி.வேணு உருவப்படத்திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்துகொண்டு அவரது உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர், எம்.வி.பேரடைஸ் திருமண மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கி.வேணு படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. கி.வே.ஆனந்தகுமார், கே.வி.ஜி.உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன் வரவேற்றார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான ராணிப்பேட்டை காந்தி, எம்.எல்.ஏ.க்கள் ஆ.கிருஷ்ணசாமி, பரந்தாமன் ஆகியோர் கலந்துகொண்டு கி. வேணு உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி பேசினர்.

    நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், இ.ஏ.பி.சிவாஜி, பா.சே.குணசேகரன், ஏ.வி.ராமமூர்த்தி, வெ.அன்புவாணன், கே.வி.லோகேஷ், ஏன்னம்பாக்கம் சம்பத், வக்கீல் வெங்கடாஜலபதி, டி.ஜே.ஜி.தமிழரசன், மு.மணிபாலன், டி.கே.சந்திரசேகர், ஜான் பொன்னுசாமி, ஆ.சத்தியவேலு, தங்கம்முரளி, பரிமளம், செல்வசேகரன், ரமேஷ்ராஜ், பரிமளம்விஸ்வநாதன், ரவிக்குமார், அறிவழகன், பி.முத்து, டி.கண்ணதாசன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×