என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகவானிதேவி"

    • உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.
    • பகவானி தேவி அரியானா மாநிலம் கேடா கிராமத்தை சேர்ந்தவர்.

    புதுடெல்லி:

    உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. டோரன் நகரில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடந்தது.

    இந்தப் போட்டியில் பங்கேற்ற 95 வயதான இந்திய மூதாட்டி பவானி தேவி தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அவர் வட்டு எளிதலில் முதல் இடத்தை பிடித்தார்.

    கடந்த ஆண்டு பின்லாந்தில் நடந்த மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் பகவானி தேவி 90 முதல் 94-வது பிரிவுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இருந்தார்.

    பகவானி தேவி அரியானா மாநிலம் கேடா கிராமத்தை சேர்ந்தவர். இந்த வயதிலும் அவர் மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

    ×