என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய சினிமா தினம்"

    • தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16-ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது.
    • தற்போது இதன் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது.

    மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு செப்டம்பர் 16-ஆம் தேதியை தேசிய சினிமா தினம் என அறிவித்திருந்தது. அந்த நாளில் சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.75 -க்கு டிக்கெட் விற்கப்படும் என கூறியிருந்தனர். அவர்களின் இந்த அறிவிப்பை ரசிகர்கள் பலரும் வரவேற்றனர்.


    இந்த நிலையில் தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16-ஆம் தேதியிலிருந்து, செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ரசிகர்களின் பங்கேற்பை அதிகரிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் செப்டம்பர் 16-ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முக்கிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகின்றன.

    அதேபோல் இந்தியில் ரன்பீர் கபூர் - அமிதாப்பச்சன் நடிப்பில் உருவான பிரம்மாஸ்திரா திரைப்படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படங்களின் வசூல் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த முடிவை மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா எடுத்து இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    ×