என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுசிகா தாரியல்"

    • ஜூடோ ஆண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜஸ்லீன் சிங் சைனி, மேக்சென்ஸ் குகோலாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
    • இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்துள்ளது.

    பர்மிங்காம்:

    72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. 4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்துள்ளது.

    இந்த நிலையில் ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 57 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சுசிகா தாரியல் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று விளையாடினார். இந்த போட்டியில் சுசிகா தாரியல், ஜாம்பியாவின் ரீட்டா கபிந்தாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.

    அதே போல் ஜூடோ ஆண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜஸ்லீன் சிங் சைனி, மேக்சென்ஸ் குகோலாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ×