என் மலர்
நீங்கள் தேடியது "ஏஜென்ட் டீனா"
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏஜென்ட் டீனா - வசந்தி
இப்படத்தில் ஏஜென்ட் டீனாவாக நடித்த வசந்தி, மாலை மலர் நேயர்களுக்காக பிரத்யேகமாக பேட்டி அளித்தார். விக்ரம் படம் குறித்தும் அவரின் சினிமா பயணம் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில், நான் படம் பார்க்க போகுறத்துக்கு முன்னாடியே ஒருத்தர் என்ன புடிச்சி நல்ல பண்ணிருக்கீங்க என்று சொன்னார். கிட்டத்தட்ட 20 வருடம் தினேஷ் மாஸ்டர் கிட்ட உதவி டான்ஸ் மாஸ்டரா இப்போ வரைக்கும் இருக்கேன், முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி இப்படி பல நடிகர்களுக்கு நடனம் பண்ணியிருக்கோம். லோகேஷ் சார் தினேஷ் மாஸ்டர்க்கிட்ட என்ன நடிக்குறத்துக்காக கேட்டாங்க யோசிக்காம உடனே ஓகே சொல்லுங்க மாஸ்டர் இத்தனை வருஷம் யாருக்குமே தெரியாம இருந்துட்டேன் கமல் சார் படம் பண்ணா எல்லாருக்கும் தெரிவேன்னு உடனே சரி சொல்லிட்டேன் என்று அவர் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.






