என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலின் தரம் பரிசோதனை"

    உத்தர பிரதேச மாநிலத்தில், பாலின் தரத்தை சோதனை செய்ய சென்ற அதிகாரிகளை பணி செய்ய விடாமல் பால் வியாபாரிகள் மற்றும் சிலர் சேர்ந்து அடித்து உதைத்து விரட்டியுள்ளனர். #MilkPurityTest #HealthOfficialsAttacked
    முசாபர்நகர்:

    உத்தர  பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் நயா கோன் கிராமத்தில் உள்ள சிலர் பாலில் கலப்படம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று அந்த கிராமத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்ட குழு சென்று ஆய்வு செய்தது. பின்னர் பால் வியாபாரிகள் இரண்டு பேரிடம் இருந்து பால் மாதிரியை பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்.

    ஆனால், பாலை பரிசோதனைக்கு எடுத்துச் செல்லக்கூடாது என கூறி வியாபாரிகள் இருவரும் தகராறு செய்துள்ளனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பால் வியாபாரிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் சேர்ந்து அதிகாரிகளை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். சோதனைக்கு எடுத்த பாலையும் தரையில் கொட்டி அழித்தனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பால் வியாபாரிகள் இரண்டு பேரை  கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. #MilkPurityTest #HealthOfficialsAttacked
    ×