என் மலர்
நீங்கள் தேடியது "safety disaster"
- புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
- நமது மாணவர்கள் முன்னேற்ற த்திற்காக கல்வி ஊக்கத்தொகை மேலும் மாநில மக்களுக்காக பல நல்ல திட்டங்கள் அளித்தவர்.
புதுச்சேரி:
புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-
ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி அசோக்கை வன்மையாக கண்டிக்கிறோம்.
மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டி ருப்பவர் முதல்-அமைச்சர் ரங்கசாமி. நமது மாநிலத்திற்கு அவர் செய்த நன்மைகள் பல.
நமது மாணவர்கள் முன்னேற்ற த்திற்காக கல்வி ஊக்கத்தொகை மேலும் மாநில மக்களுக்காக பல நல்ல திட்டங்கள் அளித்தவர். குறிப்பாக, மிக சிறிய மக்கள் தொகை கொண்ட ஏனாம் பிராந்தியத்திற்கு பல கோடி ரூபாய்களை அளித்த தனால் மற்ற பிராந்திய மக்கள் மற்றும் புதுவை பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
மேலும் அந்த சிறு ஏனாம் பகுதிக்கு தொடர்ந்து அமைச்சரவையில் இடம் கொடுத்தவர். இதனால், அனைவரின் அவதூறு பேச்சுகளுக்கும் ரங்கசாமி ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்த நன்மைகளை எல்லாம் மறந்துவிட்டு தான் தோன்றித்தனமாக முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை புதுவை மாநில மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறது. இவர் மீது புதுவை அரசு காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






