என் மலர்
நீங்கள் தேடியது "puducherry school teachers"
அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூசனோ, சிறப்பு வகுப்புகளோ நடத்தக்கூடாது என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் நடத்துவதாக அம்மாநில பள்ளிக்கல்வி துறைக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதனை அடுத்து, அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன், பயிற்சி வகுப்பு, சிறப்பு வகுப்புகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவை மீறும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






