என் மலர்
நீங்கள் தேடியது "pin curve"
- முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் மீனவர்களுடன் மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்துைரயாடல் நிகழ்ச்சி நடந்தது.
- இந்த கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த மத்திய மந்திரி, கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டார்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் மீனவர்களுடன் மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்துைரயாடல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்ற மீனவர்கள், கடல் அரிப்பை தடுக்க சோலைநகர் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும், படகு நிறுத்துவதற்கு இடவசதி செய்து கொடுக்க
வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த மத்திய மந்திரி, கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டார்.
பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் முத்தியால்பேட்டை செந்தில்குமரன் ஏற்பாட்டில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமை ச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், அசோக் பாபு எம்.எல்.ஏ, பா.ஜனதா பொதுச்செயலாளர் மோகன்குமார், மீனவர் அணி தலைவர் பழனி, மகளிர் அணி தலைவர் ஜெயலட் சுமி, மாநில துணை தலைவர் ஜெயக்குமார், பட்டியலின தலைவர் தமிழ்மாறன், இளைஞரணி நிர்வாகிகள் உமா சங் கர், ராக்பெடரிக், அஸ்வின், வணிகர் பிரிவு செயலாளர் ராயல் சீனிவாசன், பிரபாகரன், எம்.ஆர்.சரவணன், ஜெ.சரவணன், அருண்குமார், விஜய், வடிவேலு, சசிதரன், கணேஷ்குமார், அர்ஜூன், அரவிந்த், தமிழ், ஹரீஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஆயிரத்து க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு மத்திய மந்திரியுடன் உரையாடினர்.






