search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Personality development"

    • மனம் தரும் தகவல்கள், பல நேரம் பிழையானவை.
    • நடந்தவையும், நாம் கண்டவையும், நாம் நடந்ததாக நினைப்பவையும் யாவும் ஒன்றல்ல.

    ஒரு வேற்று கிரக வாசி போல், மனதை சற்று தொலைவில் இருந்து கவனித்தால் போதும். மனமாற்றத்துக்கான முதல் விதை இதுதான். மனம் ஒரு சிறந்த பணியாள். அதே நேரத்தில் மோசமான முதலாளி. ஆனால் அதை எப்படி நடத்துவது என்று தெரியாமல்தான் மோசமாக கையாண்டு வருகிறோம். மனம் கண்ணியமானது என்று நம்பும்போது, அது தன் கேவலமான குணத்தை காண்பிக்கும்.

    உறுதியானது என்று தீர்மானமாக இருக்கும்போது, அது தன் பலவீனத்தை தெரிவிக்கும். தெளிவானது என்று ஒரு முடிவுக்கு வரும் நேரத்தில் குழப்பம் ஏற்படுத்தும். அலட்சியம் காண்பிக்கையில், அடடே என்று பிரமிக்க வைக்கும்.

    நம் மனதை பற்றியே சரியாக கணிக்க முடியாத நிலையில், எதிராளியை பற்றி எல்லாம் தெரிந்ததுபோல் கருத்து சொல்லி கொண்டிருக்கிறோம். நம்மை நினைத்தால் நமக்கே சிரிப்பு வருவது இதனால்தான். மனம் தரும் தகவல்கள், பல நேரம் பிழையானவை. நம் நினைவுத்திறனும் கற்பனை ஆற்றலும் பல நேரம் நிஜத்துடன் பொருந்துவது இல்லை.

    நடந்தவையும், நாம் கண்டவையும், நாம் நடந்ததாக நினைப்பவையும் யாவும் ஒன்றல்ல. இருந்தாலும் நம் மனம் தரும் தற்காலிக தகவல்களை நம்பி, வாழ்க்கையின் பெரிய முடிவுகளை எடுத்து சில நேரம் பிரச்சினைகளில் தவிக்கிறோம்.

    மனித மனதின் நுட்பமான அறிவுதான், இந்த உலகம் இவ்வளவு முன்னேற வழிவகுத்துள்ளது. ஒவ்வொரு சாதனையும் மனத்தின் வெற்றிதான். அதேநேரம் இங்கு நிகழும் ஒவ்வொரு அவலத்துக்கு காரணமும் மனித மனம்தான்.

    கொலைகள், பாலியல் வன்முறைகள், மோதல்கள், நோய்கள், கிளர்ச்சிகளுக்கு காரணமும் மனம்தான். உலகின் அத்தனை சாத்தியக்கூறுகளுக்கும் காரணம் மனித மனம்தான். அதனால் அதன் முழு வீரியத்தை அறிவதுபோல், அதன் அத்தனை வக்கிர குணத்தையும் பலவீனங்களையும் அறிவதும் முக்கியம். மனதை உள்நோக்கி பார்க்கத் தொடங்கும்போது மனமும் வாழ்க்கையும் சீரடையத் தொடங்கும் என்பதே, மனம் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இருக்கும் நிபுணர்களின் கருத்து.

    • ஆண்களை விட பெண்களுக்கு, ஆளுமை வளர்ச்சி மிக அவசியம்.
    • இளம் பெண்கள் இதில் கவனம் செலுத்துவது இல்லை.

    ஆளுமை என்பது நாம் யார் என்பதைப் பற்றிய சொல். தனித் திறமைகள் என்றில்லாமல், ஒட்டுமொத்தமாக நம்மை அடையாளப்படுத்தக்கூடிய அம்சம். படிப்பும் பல்வகைத் திறன்களும் உள்ள ஒருவர் சிறந்த ஆளுமையாக விளங்குவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த ஆளுமைத் திறன்தான் சாதாரண மனிதர்களையும் தலைவர்களையும் பிரிக்கிறது. சாமானிய நபர்களையும் சமூகத்தையே மாற்றக்கூடிய வலிமை படைத்தவர்களையும் வேறுபடுத்துகிறது.

    'பெர்சனாலிட்டி டெவலெப்மெண்ட்' எனப்படும் ஆளுமை திறன் வளர்ப்பு பெரியவர்கள்-சிறியவர்கள் பாகுபாடின்றி, இன்று எல்லோருக்குமே தேவைப்படுகிறது. பள்ளி-கல்லூரியில் தனித்துவமாக விளங்க, நேர்காணலில் பிரகாசமாக ஜொலிக்க, அலுவலகத்தில் முதன்மையானவராக திகழ, ஆளுமை திறன் வளர்ச்சி அவசியம்.

    நம்மை மெருகேற்றும் ஆளுமை வளர்ச்சிதான், சமூகத்தில் நமக்கான தனி அடையாளத்தை உண்டாக்கும்.

    ''ஆளுமை வளர்ச்சி என்பது, வெறும் உடை நாகரிகத்துடன் நின்றுவிடாது. உடை, நடை, தோற்றப் பொலிவு, மற்ற நபர்களை அணுகும் விதம், மற்றவர்கள் முன்பு நாகரிகமாக நடந்து கொள்ளும் விதம்... இப்படி நிறைய இருக்கிறது. ஆனால் இக்கால இளைஞர்கள்-இளம் பெண்கள் இதில் கவனம் செலுத்துவது இல்லை. கிடைக்கும் வேலைகளில், தங்களை பொருத்திக்கொள்கிறார்களே தவிர தங்களுக்கு ஏற்ற வேலைகளை யாரும் தேடுவதில்லை.

    ''ஆண்களை விட பெண்களுக்கு, ஆளுமை வளர்ச்சி மிக அவசியம். ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகில் எப்படி நாகரிகமாக உடை அணிவது, எத்தகைய பண்புகளுடன் நடந்து கொள்வது, பொது இடத்தில் ஆண்களுடன் எப்படி பேசி பழகுவது, சக ஊழியர்களுடனான நட்பு எப்படி இருக்க வேண்டும், 'குட் டச்' மற்றும் 'பேட் டச்' போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும்.

    வார்த்தைகள் என்பது கருத்துக்களை தெரிவிப்பதற்குத்தான் என்று எண்ணி பிறரின் பேச்சைக் கவனிப்பவர்கள் பேச்சின் முழு கருத்துக்களையும் கவனிக்க வாய்ப்புள்ளது. திறந்த மனதோடு எந்த கவனச் சிதறல்களும் இல்லாமல், பிறரின் பேச்சைக் கவனித்தால் பேச்சிலுள்ள அத்தனை கருத்துக்களையும் தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

    பெண் தன் ஆளுமைகளை; கூர்மைப்படுத்துவதிலும் வெளிப்படுத்துவதும் நிலைக்கச் செய்வதும் அது சம்பந்தமாக உலகம் பேச வைப்பதும் முதலாவது பெண்சார்ந்த செயற்பாடாக கருத்தில் கொள்ளவேண்டும். ஆனாலும் அது பெண்சார்ந்தது மட்டுமல்ல என்பதனையும் சமுகம் – ஆண்கள் சார்ந்த தேவையாக கருதுதல் தொடர் தேர்ச்சியான வெற்றிக்கும் விடுதலைக்கும் வித்திடச் செய்யும்.

    ஒரு பெண் சமூக அரசியல் பொருளாதார அந்தஸ்த்து கடந்து தனக்கேற்பட்ட தன் சார்ந்தவர்களும் ஏற்பட்ட கொடுமைகளை அச்சமின்றி பயமின்றி கூறத்தொடங்கும் பொழுது அச்சமூகத்தின் விருத்திக்கு முதலாவது வெற்றி கேடயம் கொடுக்கப்படுகின்றது. ஒரு சமூக பார்வையில் பொறுக்க முடியாத தனிமனித சுதந்திரத்தினையும் தன்மானத்தினையும்; பாதிக்கக் கூடிய எச்செயலானாலும் அது வெகுவாக பேசப்படவேண்டிய பொருளாகின்றது. எனவே அது உலகம் விழித்துக் கொள்ளும் வரையும் உரத்துக் கூறப்படவேண்டிய இலக்குள்ள செயலாக கருதப்படவேண்டும்.

    பெண்கள் தம் குரல் உயர்த்தி உயிர் வலிமை உள்ளவரை போராடி வெற்றிக்கொள்வதே உலகத்தின் வர்க்க கட்டமைப்பின் வரலாற்று பதிவாக காணப்படுகின்றது. எனவே பெண் ஆளுமைகள் ஸ்திரம்பெற ஐக்கியப்பட்டு போராடுவோம்.

    ×