என் மலர்
நீங்கள் தேடியது "Omshaktisekar"
- புதுவை மாநிலத்தில் ஆண்டு தோறும் மருத்துவ கலந்தாய்வு என்பது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டை போல நடந்து வருகிறது.
- மேலும் இதே போல அவசரமாக உரிய நடைமுறை இல்லாமல் நடத்தப்பட்ட முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் ஆண்டு தோறும் மருத்துவ கலந்தாய்வு என்பது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டை போல நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி அண்டை மாநிலங்களில் தர வரிசை பட்டியல் வெளியிட பட்டு முதல்கட்ட கலந்தாய்வு நடத்தி முடித்து 2-வது கலந்தாய்வு நடந்து வருகிறது.
ஆனால், புதுவையில் வரை தரவரிசை பட்டியல் கூட வெளியி டப்படா தது மக்களிடமும் மாணவர்க ளிடம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பிட்ட காலகட்டத்தில் தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும் என தெரிந்தும் வேண்டு மென்றே திட்டமிட்டு காலதாமதம் செய்யும் அதிகாரிகள் மீது முதல்- அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இதே போல அவசரமாக உரிய நடைமுறை இல்லாமல் நடத்தப்பட்ட முதுநிலை மருத்துவ கலந்தாய்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.மாணவர்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் முதல்- அமைச்சர் தலையிட்டு மருத்துவ படிப்புக்கான சென்டாக் தரவரிசை பட்டியலை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு ஓம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.






