என் மலர்
நீங்கள் தேடியது "Ola driver-auto"
- பயணியை ஏற்றிச்செல்ல சரத்குமார் புதிய பஸ் நிலையம் அருகே காரை நிறுத்தி காத்துக்கொண்டிருந்தார்.
- காரை எடுத்து வந்து பயணிகளை ஏற்றிச்சென்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.
புதுச்சேரி:
புதிய பஸ்நிலையம் அருகே சவாரி ஏற்றிச்செல்வ தில் ஓலா கார் ஒட்டுநர்-ஆட்டோ டிரைவர்கள் மோதல் ஏற்பட்டது.
புதுவை பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். இவர் ஓலா நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தம் செய்து கார் ஓட்டி வருகிறார்.
இந்த நிலையில் சுற்றுலா பயணி ஒருவர் ஆன்லைன் மூலமாக கார் புக்கிங் செய்தார். இதையடுத்து அந்த பயணியை ஏற்றிச்செல்ல சரத்குமார் புதிய பஸ் நிலையம் அருகே காரை நிறுத்தி காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் சிலர் அங்கு வந்தனர்.
அவர்கள் சரத்குமாரிடம் காரில் பயணியை ஏற்றிச்செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர்கள் ஒன்று சேர்ந்து சரத்குமாரை கையாலும் கல்லாலும் தாக்கினர்.
மேலும் இனிமேல் இப்பகுதியில் காரை எடுத்து வந்து பயணிகளை ஏற்றிச்சென்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சரத்குமார் உருளையன் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓலா கார் ஓட்டுநரை ஆட்டோ டிரைவரை தாக்கும் சம்பவம் சமூக வலைதலத்தில் வேகமாக பரவி வருகிறது.






