என் மலர்
நீங்கள் தேடியது "North Zone Thermal"
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின்நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் உள்ள ஐந்து அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் அனல்மின் நிலையத்தில் இரண்டாவது நிலை 2-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மிகை மின் உற்பத்தி காரணமாக 2-வது அலகில் பணிகளை நிறுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திபட்டுபுதுநகர் வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும், 2-வது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல்நிலை மூன்றாம் அலகில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
2-வது நிலை இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் என மொத்தம் 810 மெகாவாட் நிறுத்தபட்டுள்ளன. பழுதினை சரிசெய்யும் பணியில் மின் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் உற்பத்தி தொடங்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.






