search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Medicare Insurance"

    தேசிய மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை கவர்னர் கிரண்பேடி வழங்கினார். #KiranBedi #AyushmanBharat #PMModi

    புதுச்சேரி:

    உலகில் மிகப் பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக “ஆயுஷ்மான் பாரத்” என்னும் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

    தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுவை தலைமை செயலகத்தில் காப்பீட்டு திட்ட தொடக்க விழா நடந்தது.

    கவர்னர் கிரண்பேடி திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினார். தலைமை செயலாளர் அஸ்வினி குமார், சுகாதார துறை செயலாளர் கந்தவேலு, இயக்குனர் ராமன், அரசு மருத்துவ கண்காணிப்பாளர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்த திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000 முதல் ரூ.1200 வரை காப்பீட்டு தொகை செலுத்தும். மத்திய அரசு 60 சதவீத நிதியும், மாநில அரசு மீதி தொகையையும் ஏற்கும்.

    ஏழை குடும்பத்தினர் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறலாம். இது முற்றிலும் பணமற்ற திட்டமாகும். இதய அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, ஸ்டென்டிங் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் பெற முடியும்.

    கடந்த 2013-ம் ஆண்டு சமூக பொருளாதார மற்றும் ஜாதி வாரியாக மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். புதுவையில் 1 லட்சத்து 3 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #KiranBedi #AyushmanBharat #PMModi

    ×